“கோயில்களில் இலவச பார்க்கிங் கிடையாது...” - சட்டப்பேரவையில் அமைச்சர் ரமேஷ் கட் அண்ட் கறார் அறிவிப்பு...!
இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கான இருசக்கர வாகன நிறுத்துமிட வசதியும் செய்து தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் எனக்கூறினார்.
இன்றைய மானியக்கோரிக்கையின் போது தவெக எம்.எல்.ஏ. ஈசிஆர் சரவணன், திருவான்மியூரில் உள்ள புகழ்பெற்ற பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் கோயிலுக்கு இலவச பார்க்கிங் அமைப்பது குறித்து கேள்வி எழுப்பினார். அந்த ஆலயத்திற்கு பக்தர்கள் பெருமளவு வருவதால், அந்த ஆலயத்திற்கு ஒரு மண்டபமும், இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கான இருசக்கர வாகன நிறுத்துமிட வசதியும் செய்து தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் எனக்கூறினார்.
இதற்கு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பதிலளித்தாவது: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திருவான்மியூர் அருள்மிகு பாம்பன் சுவாமிகள் திருக்கோயிலைப் பொறுத்தவரைக்கும், ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் 2025ஆம் ஆண்டு வரையிலும் கட்டணம் இல்லாத பார்க்கிங் வசதி நடைமுறையில் இருந்தது.
ஆனால், அந்தக் கட்டணம் இல்லாத பார்க்கிங் வசதி நடைமுறையில் இருந்தபோது, அந்தக் கோயிலில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டன. நிறைய வாகனங்கள் நிறுத்துவதற்குக் கட்டணம் இல்லாததால், சிலர் தங்களுடைய வாகனங்களை நிறுத்திவிட்டு இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் வரைக்கும் அந்த வாகனங்களை எடுக்காமல் அங்கேயே விட்டுச் செல்லக்கூடிய சூழ்நிலைகள் இருந்தன.
இதையும் படிங்க: வாகன ஓட்டிகளே உஷார்! சாலையோரம் கார், பைக் நிறுத்தினால் ரூ.25,000 அபாரதமாம்..!!
இது தொடர்பாக சில காவல்துறைப் புகார்களும் வந்துள்ளன. அது தொடர்பான பதிவுகளும் நம்மிடம் இருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில், இது தொடர்பாக விரிவான ஆய்வை மேற்கொண்டு, அந்தக் கோயிலுடைய நிதிநிலையையும் பரிசீலித்து, எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாத வகையில், குறிப்பாக இதுபோன்று வாகனங்களை நிறுத்திவிட்டு இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் இலவச பார்க்கிங் என்று பயன்படுத்தும்போது பக்தர்கள் யாரும் அவதிப்படாத வகையில், இந்த ஆய்வுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, மாண்புமிகு உறுப்பினருடைய கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: "அமைதியான ஆன்மீகம்"..! பொதுமக்களுக்கு அமைச்சர் ரமேஷ் வைத்த கோரிக்கை..!