×
 

அவதூறு, ஆபாச பேச்சு! அதுதான் தி.மு.க.வின் DNA! அமைச்சர் ரமேஷ் சரமாரி குற்றச்சாட்டு!

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மட்டுமின்றி பொதுமக்கள், பெண்கள் உள்ளிட்ட யாரையும் இழிவுபடுத்தும் வகையில் பேசப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

திருச்சி மலைக்கோட்டையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், சாமி தரிசனம் செய்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசியல், முதல்வரின் வெளிநாட்டு பயணம், தி.மு.க. போராட்டங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பரபரப்பாக கருத்து தெரிவித்தார்.

தமிழக முதல்வரின் லண்டன் பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது தொடர்பாக பேசிய அமைச்சர், அரசியல் மற்றும் கொள்கை ரீதியான கேள்விகளுக்கு பதிலளிக்கலாம் என்றும், அரசியல் நோக்கத்துடன் விமர்சனம் செய்பவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். முதல்வர் அனைவரும் பாராட்டும் வகையில் ஆட்சியை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தை விளையாட்டுத் துறையில் உலக அளவில் முன்னேற்ற முதல்வர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அமைச்சர், நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தய நிகழ்ச்சியை முதல்வர் தொடங்கி வைத்ததையும் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் தமிழர்களின் பெருமையை உலக அளவில் எடுத்துச் செல்லும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 150 கிலோ கொழுக்கட்டை! திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு அசத்தல் படையல்!

தி.மு.க. சார்பில் நடைபெற்ற போராட்டங்களில் முதல்வர் மற்றும் அமைச்சர்களை அவதூறாகவும் ஆபாசமாகவும் விமர்சித்ததாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், போராட்டம் நடத்துவது அனைவருக்கும் உள்ள ஜனநாயக உரிமை என்றும், ஆனால் தனிநபர்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுகளை ஏற்க முடியாது என்றும் கூறினார்.

மேலும், தி.மு.க.வினர் மீது கடுமையான அரசியல் விமர்சனத்தை முன்வைத்த அமைச்சர், அந்த கட்சியின் பேச்சு கலாசாரமே இதுபோன்றதாக இருப்பதாக குற்றம்சாட்டினார். உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்க்கட்சியினரை விமர்சிக்கும் விதம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மட்டுமின்றி பொதுமக்கள், பெண்கள் உள்ளிட்ட யாரையும் இழிவுபடுத்தும் வகையில் பேசப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தில் திறனற்ற ஆட்சி நடைபெறுவதாக எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டு குறித்தும் அவர் பதிலளித்தார். கடந்த ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை தற்போதைய அரசு படிப்படியாக சரிசெய்து வருவதாகவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாகவும் ரமேஷ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருச்சிதாங்க பெஸ்ட்! தூய்மையான காற்று நகரங்கள் ரேங்கிங்! சென்னையை பின்னுக்கு தள்ளி அசத்தல்! தமிழகத்துக்கு பெருமை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share