×
 

அது என்ன பவுடர்..? திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்றீர்களா..? திமுக - தவெக காரசார விவாதம்..!!

அமைச்சர் சரத் போதை பொருள் பயன்படுத்தி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமார் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த சர்ச்சை, ஜூன் 2026-இன் இறுதியில் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசில் முதல்வர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற சரத்குமார், தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்படுகிறார்.

இந்த விவகாரம், சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி முதல்வர் விஜய் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தானில் பங்கேற்ற அதே நாளில் வெடித்தது.சமூக வலைதளங்களில் வைரலான ஒரு பழைய வீடியோவே இந்த சர்ச்சையின் மையமாக அமைந்தது. அந்த வீடியோவில், சரத்குமார் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்வையிடும்போது, தனது மொபைல் போன் திரையின் மீது வெள்ளை நிற பவுடர் போன்ற பொருளை வைத்து, ஏடிஎம் கார்டு அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி அதை நேர்க்கோட்டில் அமைத்து, ஒரு ரூபாய் 500 நோட்டை வைத்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த காட்சி, போதைப்பொருளை சுவாசிக்கத் தயார்படுத்துவது போலத் தோன்றியதால், பலர் இதை போதைப்பொருள் பயன்பாடு எனக் குற்றம் சாட்டினர். வீடியோ முதலில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பதிவேற்றப்பட்டதாகவும், அப்போது சரத்குமாரே அதை “தக் லைஃப் மொமென்ட்” என்ற தலைப்புடன் பகிர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாயின.

இதையும் படிங்க: மாணவர்கள் கொலை... தொடரும் கொடூரங்கள்..! பேரவையில் உதயநிதி ஸ்டாலின் தாக்கு..!!

இந்த சம்பவம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது. ஸ்டேடியத்தில் நடந்த அவற்றை பற்றி விளக்கம் அளித்து விட்டதாகவும் ஆதாரமின்றி தேவை இல்லாமல் பேசக்கூடாது என்றும் அமைச்சர் சரத் தெரிவித்தார். திமுக ஆட்சியில் தான் அந்த நிகழ்வு நடந்தது என்றும் அப்படி என்றால் ஸ்டேடியம் வளாகத்தில் போதைப்பொருள் விற்றார்களா என்று கேள்வி எழுப்பினார். அப்போ ஒரு கே என் நேரு, கோர்ட்டில் இருக்கும் வழக்கு பற்றி ஏன் பேசுகிறார் என்ற கேள்வி எழுப்பினார். பவுடர் பயன்படுத்தியது பற்றி மட்டும் அமைச்சர் பதில் தரட்டும் என்று கூறினார். போதை பொருள் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. 

இதையும் படிங்க: மானிய கோரிக்கை மீதான விவாதம்..! கூடியது சட்டப்பேரவை.. பரபரப்பான விவாதம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share