×
 

அப்பா, அம்மாவை கதறவிட்ட அன்புமணிக்கு கறையைப் பத்தி பேச தகுதியில்ல... சேகர் பாபு நெத்தியடி ...!

தமிழ்நாட்டிற்கே மாறாத ஒரு கரையை அன்புமணி ராமதாஸ் ஏற்படுத்திவிட்டு சென்றுவிட்டார். குடும்ப பாசம், தாய் தந்தை பாசம் என்னவென்று தெரியாமல் பறந்து கொண்டிருக்கிறார். கறையைப் பற்றி அவர் சொல்லக்கூடாது - அமைச்சர் சேகர் பாபு காட்டம்

செங்கல்பட்டு நேதாஜி நகர் பகுதியில் சென்னை பெருநகர வளர்ச்சி குடும்பம் சார்பில் 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவர் ஆன சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு நகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நேதாஜி நகர் பகுதியில் புதியதாக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 60% பணிகள் நிறைவு பெற்ற நிலையில், இன்று காலை அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட உள்ள வசதிகள் குறித்தும் அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். அப்போது பேசிய அமைச்சர், செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் சமையலறையுடன் கூடிய மலிவு விலை உணவகம் உருவாக்கப்பட வேண்டும், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் கடைக்காரர்கள் சொல்லுகிற விலையை கொடுத்து தான் வாங்கி சாப்பிட வேண்டி உள்ளது. பேருந்து நிலையத்திற்கு வருபவர்கள் பெரும் பணக்காரர்கள் அல்ல, பேருந்து நிலையங்களில் ஒரு தோசை 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும், ஒரு இட்லி 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை எல்லாம் அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டுமென பேசினார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இப்பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும், புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு அது வரப்பிரசாதமாக அமையும், மாமல்லபுரம் பேருந்து நிலையம் தொல்லியல் துறையின் ஒரு அனுமதிக்காக காத்திருக்கிறோம், அதற்கு ஒரு உண்டான தீர்வாக தொல்லியல் துறைக்கு தகுந்த ஆதாரத்துடன் விண்ணப்பிக்கப்பட்டு அனுமதி வாங்கப்பட்டிருக்கிறது. விரைவில் அந்த பணிகள் முடித்து விடப்பட்டு ஜனவரி மாதத்தில் மாமல்லபுரம் பேருந்து நிலையம் திறக்கப்படும். 

இதையும் படிங்க: அப்பப்பா...!! சேகர்பாபுவை கொண்டாடி தீர்த்த முதல்வர்..! செயல்வீரர் என புகழாரம்..!

கடந்த ஆட்சியைப் போல் அவர்கள் விட்ட பணிகளை நாங்கள் நிறைவேற்றுவது போல், நாங்கள் எடுக்கும் பணி எங்கள் காலத்திலேயே நிறைவேற்றி தரப்படும். மலிவு விலை உணவகம் தற்போது திறக்கப்படுகிற குத்தம்பாக்கம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், ஆவடி உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் மளிகை விலை உணவகம் நிச்சயமாக செயல்படுத்தப்படும். தொடர் கோரிக்கைகளின் அடிப்படையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் பல்வேறு சுய தொழில் செய்பவர்களிடம் கேட்டோம், சமைப்பதற்கு உண்டான இடங்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்குண்டான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம், நிச்சயமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மலிவு விலை உணவகம் ஏற்படுத்தப்படும். 

திமுக மீது கறை படிந்து உள்ளதாக அன்புமணி கூறியது குறித்து கேட்டபோது, தமிழ்நாட்டிற்கே மாறாத ஒரு கரையை அன்புமணி ராமதாஸ் ஏற்படுத்திவிட்டு சென்றுவிட்டார். குடும்ப பாசம் என்னவென்றால், தாய் தந்தை பாசம் என்னவென்று தெரியாமல் பறந்து கொண்டிருக்கிறார். கறையைப் பற்றி அவர் சொல்லக்கூடாது. ஏற்பட்ட சம்பவம் வருந்தக்கூடியது, வருத்தமளிக்கிறது, ஏற்றுக்கொள்ள முடியாதது அதற்குண்டான அனைத்து நடவடிக்கைகளையும், போர்க்கால அடிப்படையில் நாலுகால் பாய்ச்சல் என்பார்கள், ஆனால் எட்டு கால் பாய்சலில் முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். முதல்வரே சிபிஐ விசாரணை நடத்தும் என கூறியுள்ளார். இது "சட்டத்தின் ஆட்சியில் சாத்தான்களின் ஆட்சி அல்ல" இதுபோன்ற துயர சம்பவம் இனிமேல் நடக்காமல் இருக்க அன்றைய தினமே காவல்துறையினரை அழைத்து மாநில அளவிலான ஆய்வுக் கூட்டத்தை நடத்தி உள்ளார். 

கடந்த கால ஆட்சி போல் குற்றம் நடந்து 10 முதல் 15 நாட்கள் கழித்து நடவடிக்கைக்கு செல்லவில்லை, என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியுமோ உச்சகட்ட நடவடிக்கைகளை முதல்வர் எடுத்திருக்கிறார். போராட்டங்களை பொறுத்தவரை பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தப்படாமல் நடத்த வேண்டும் என்பதற்காக காவல்துறையினர் அதற்கு தனியாக இடத்தை ஒதுக்கி தந்து இருக்கிறது. திடீர் போராட்டங்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதால் தான் அனுமதி மறுக்கப்படுகிறது. ஜனநாயக முறையில் நடத்தப்படும் அனைத்து ஆர்ப்பாட்டத்திற்கும் இந்த ஆட்சி  அனுமதி அளித்து வருகிறது என அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்தார்.

இதையும் படிங்க: அண்ணா,பெரியாரை விமர்சித்து வீடியோ.. அடிமை சாசனம் எழுதி கொடுத்த அதிமுக! சேகர்பாபு கடும் விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share