சம்பாதித்ததை காப்போம்... சம்மந்தியை மீட்போம்! இபிஎஸ்ஐ கலாய்த்த சேகர்பாபு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்து பேசினார்.
தமிழ்நாடு முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவரது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது திருச்சுழி தொகுதி வளம் பெற அதிமுக ஆட்சியில் காவிரி குண்டார் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவோம் என்ற உறுதியளித்திருந்தார். இதனிடையே கூட்டத்தின் நடுவே திமுக நிர்வாகியின் கார் ஒன்று சென்றுள்ளது. அந்தக் கார் கண்ணாடி அடித்து உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடல்நிலை சரியில்லாத சிறுவனை திமுக சேர்மனின் சகோதரர் காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படும் நிலையில் கூட்டத்தை கலைக்கும் வகையில் திமுகவினரை ஈடுபடுவதாக கூறி கார் கண்ணாடியை அதிமுகவினர் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: போதும் சாமி... ரீல் அந்து போச்சு! மேயரை பந்தாடும் விமர்சனங்கள்..!
இபிஎஸ் கூட்டத்தின் போது திமுக நிர்வாகியின் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது தொடர்பான சம்பவம் குறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது காயம் அடைந்தவர்களை அழைத்துச் செல்ல தான் ஆம்புலன்ஸ் என்றும் ஆனால் ஆம்புலன்ஸ் தாக்கப்படும் நிகழ்வு நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதுபோன்ற சம்பவங்கள் எடப்பாடி பழனிச்சாமியின் தோல்வி பயத்தை காட்டுவதாக கூறினார்.
இனிமேல் எடப்பாடி பழனிச்சாமி இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவார் என்றும் திமுகவும் காவல்துறையும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி நடத்திவரும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரத்தை விமர்சித்து பேசிய சேகர்பாபு, சம்பாதித்ததை காப்போம் சம்மந்தியை மீட்போம் என்று கூறிவிடலாம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கடந்த 4 வருடத்தில் என்னென்ன செஞ்சிருக்கோம் தெரியுமா? திமுக அரசின் திட்ட செயலாக்கம் குறித்த பிரஸ்மீட்…