அவசரப்படாதீங்க... ஆம்னி பேருந்து உரிமையாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமைச்சர்...!
ஆம்னி பேருந்து உரிமையாளர்களை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்
அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பை வெளியிட்டடிருந்த நிலையில், அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களில் சாலை வரியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையின் எதிரொலியாக தற்போது பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
அண்டை மாநிலங்களில் சாலை வரியால் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக இன்று முதல் தமிழகத்திலிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு தனியார் ஆம்பனி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்..இது தொடர்பாக பேச்சு வார்த்தை மேற்கொள்வதற்காக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவகங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: #Breaking கேரள எல்லையில் நிற்கும் ஆம்னி பேருந்துகள்... தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு...!
நவ.7ம் தேதி இரவிலிருந்து கேரளா மாநிலத்திற்கு சென்ற தமிழகம் பதிவெண் கொண்ட 30க்கும் மேற்பட்ட பேருந்துகளை கேரளாவில் சிறைப்பிடித்து 70 லட்சம் அபராதம் விதித்தனர். அதேபோல கர்நாடகாவிலும் தமிழக பதிவெண் கொண்ட 60க்கும் மேற்பட்ட பேருந்துகளை சிறைப்பிடித்து இரண்டரை லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர். இதேபோல் ஆந்திரா, புதுச்சேரியிலும் வரி மற்றும் அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
பிற மாநிலங்களில் இருந்து ஆம்னி பேருந்துகள் தமிழகம் வரும்பொழுது கூடுதலாக சாலை வரி வசூலிப்பதன் காரணமாக, தமிழக பதிவு ஏற்றுக்கொண்ட வாகனங்க தங்கள் மாநிலத்திற்கு வரும்போது நாங்களும் அதே அளவு வரி வசூலிப்பதாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் இன்று முதல் தமிழகத்திலிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கு தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்தனர். இந்த நிலையில் தான் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பிற்பகல் இது தொடர்பாக பேச்சு வார்த்தை மேற்கொள்ள ஆம்னி பேந்து உரிமையாளர் சங்கத்தினை அழைப்புக்கு விடுத்திருக்கிறார்.
நேற்றைய தினமே இது தொடர்பாக தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய முடிவு எடுக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்த நிலையில், இது தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக அமைச்சர் சிவசங்கர் ஆம்னி பேருந்து உரிமையாளர்களை இன்று பிற்பகல் பேச்சு வார்த்தை மேற்கொள்ள அழைப்பு விடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலா..!! அப்போ இந்த நம்பர்களுக்கு புகார் கொடுங்க..!!