தமிழ்நாட்டில் மீண்டும் மின்கட்டண உயர்வு? அமைச்சர் சிவசங்கர் கொடுத்த பரபரப்பு அறிக்கை..!
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயராது என அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக மின் கட்டண உயர்வு குறித்த தகவல் பரவி வந்த நிலையில் மின்கட்டணம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் பேசினார். அப்போது, வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை என்றும் அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை.,அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும்., கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது., தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மக்களை காப்பது அரசின் கடமை... அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட கண்டிஷன்ஸ்!
எனினும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடர வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இரையாக்கப்படும் இளம்பெண்கள்.. ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! "டம்மி அப்பா" - ஸ்டாலினை வெளுத்த இபிஎஸ்!