×
 

#BREAKING: தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள்.. தமிழக அமைச்சரவையில் முடிவு..!

தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தரம் தொடர்பான வழக்குகளின் முடிவில் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தமிழக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக பேசிய அவர், தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். கலைஞர் ஆட்சியில் தான் தூய்மை பணியாளர் நல வாரியம் கொண்டுவரப்பட்டது என விளக்கம் அளித்தார்.

தூய்மை பணியாளர்கள் மீது தனி கரிசனத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார் என தெரிவித்தார். தூய்மை பணியாளர்கள் துறைசார் நோய்களை கண்டறியவும் சிகிச்சை அளிக்க தனிச் திட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். தூய்மை பணியாளர்கள் பணியின்போது இறந்தால் கூடுதலாக 5 லட்ச ரூபாய் என 10 லட்சம் இழப்பீடு தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

தூய்மை தொழிலாளர்கள் கடன் உதவிக்காக 10 கோடி ரூபாய் டிக்கெட் செய்யப்படும் என்றும் தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் எந்த பள்ளியில் பயின்றாலும் புதிய உயர் கல்வி உதவித் தொகை திட்டம் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்! ஆணவ படுகொலை தனிச்சட்டம்.. மக்கள் எதிர்பார்ப்பு..!

மேலும் நகர்ப்புற தூய்மை பணியாளர்களுக்கு 30,000 குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்றும் கிராமப்புற தூய்மை பணியாளர்களுக்கு கலைஞர் வீடு திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறினார். தூய்மை பணியாளர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த ஆறு சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும் என்று கூறினார்.

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் முதல் முறையாக சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட உள்ளதாகவும், தூய்மை பணியாளர்கள் குழந்தைகளின் உயர்கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறினார். தூய்மை பணியாளர்கள் குழந்தைகளுக்கு உயர்கல்வி, விடுதி மற்றும் புத்தக கட்டணம் வழங்கப்படும் எனவும் கூறினார்.

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் என்றும் தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாகவும்., வழக்குகளின் முடிவில் பணி நிரந்தரம் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: #BREAKING: தூய்மை பணியாளர்கள் குண்டு கட்டாக கைது! ரிப்பன் மாளிகையில் பரபரப்பு.. போலீசார் குவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share