பொங்கலுக்கு விலையில்லா வேட்டி, சேலை... அமைச்சர் விஜய் பாலாஜி சொன்ன குட்நியூஸ்...!
சேலை டெண்டர் முடிந்து நூல் கொள்முதல் செய்யப்படுகிறது முதற்கட்டமா 476 மெட்ரிக் டன் நூல் அந்தந்த சொசைட்டிக்கு அனுப்பப்பட்டு தயார் நிலையில் உள்ளது
ஈரோடு பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் அறையினை திறந்து வைத்த தமிழ்நாடு கைத்தறி துணி நூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் சி எஸ் ஆர் நிதி மூலமாக 7 தாய்மார்கள் பாலூட்டும் அறை தயார் நிலையில் இருந்தது. அதனை திறப்பு விழா செய்துவிட்டு பேருந்து நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சோலார் பேருந்து நிலையத்திற்குள் அரசு பேருந்துகள் செல்கிறது. தனியார் பேருந்துகள் தற்போது செல்வதில்லை.
இலவச வேட்டி, சேலை டெண்டர் முடிந்து நூல் கொள்முதல் செய்யப்படுகிறது முதற்கட்டமா 476 மெட்ரிக் டன் நூல் அந்தந்த சொசைட்டிக்கு அனுப்பப்பட்டு தயார் நிலையில் உள்ளது .15 நாளில் உற்பத்தி தொடங்கும். அதுவரை நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு மெட்ரிக் டன் வெளி மார்க்கெட்டில் கொள்முதல் செய்ய அறிவுறுத்தல் பட்டுள்ளது .
இதையும் படிங்க: அமைச்சரை ரவுண்டு கட்டிய தொழிலாளர்கள்... எரிச்சலில் அதிகாரிகளிடம் எகிறிய விஜய் பாலாஜியால் பரபரப்பு...!
இலவச வேட்டி சேலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
எல்லோருக்கும் கடந்த ஆண்டு போல தாமதம் ஆகாமல் குறிப்பிட்ட நேரத்தில் நெசவாளர்களுக்கும் சரி பொதுமக்கள் சரி சென்றடையும் கூலி உயர்வு தொடர்பாக அதிகாரிகளிடம் தகவல் சொல்லப்பட்டுள்ளது. ஆய்வு செய்து வருகின்றனர் .
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர், சட்டசபையிலேயே பொதுப்பணி அமைச்சர் ஆதவ் அர்ஜுன் அவர்கள் பதில் சொல்லிவிட்டார் . லஞ்சம் இருக்கக்கூடாது ஊழல் இருக்கக்கூடாது என்று சொல்லுகிறோம் தவறான வழிக்கு யாரும் போய்விடக் கூடாது என்பதற்காக முதலமைச்சரே இந்த திட்டத்தை அறிவிக்கவில்லை ஒரு எம்எல்ஏ கோரிக்கை வைத்ததால் அறிவிக்கப்பட்டது. அவர்களுடைய நலன் கருதி நல்லெண்ணத்துடன் சொல்லி இருக்கிறார்கள் யாருகிட்ட அடிப்படை வசதிகள் இல்லையோ அவர்களுக்கு அவர்கள் விண்ணப்பித்தால் கார் வழங்கப்படும் .
தமிழ்நாடு முழுவதும் தார் விலை ஏற்றத்தால் நிறுத்தப்பட்டுள்ள சாலை பணிகளை மீண்டும் தொடங்க முதலமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். சோலார் பேருந்து நிலையத்தை மேம்படுத்துவதற்காக என்னென்ன பணிகள் தேவை என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.
இதையும் படிங்க: பெயர் மாற்றுவதில் முதல்வர் பிசி.! சட்டப்பேரவையை சினிமா செட்-னு நெனச்சுட்டாரு..! ஸ்டாலின் விமர்சனம்.!!