×
 

ஆண்களுக்கு ஏன் இலவச பஸ் இல்லை?... போக்குவரத்து துறை அமைச்சர் கொடுத்த FUN கவுண்ட்டர்....!

உங்கள் பணத்தை தான் மிச்சம் பண்ணி கொடுத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.  அமைச்சரின் பதிலால் செய்தியாளர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் இல்லையா என்று போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு, அமைச்சர் நகைச்சுவையாக பதில் ஒன்றை அளித்துள்ளார்.

இது தொடர்பாக, நாமக்கலில் போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:   தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அப்போது, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தை விரிவு படுத்தி இருக்கிறீர்கள். ஆண்கள் அந்த லிஸ்டில் இல்லையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்வியை எதிர்பாராத அமைச்சர் பார்த்திபன், சுதாரித்துக் கொண்டு நகைச்சுவையாக பதில் ஒன்றை அளித்தார். அதில், எனது தங்கையை உங்களுக்கு கொடுத்து இருக்கிறேன். அதாவது, திருமணம் செய்து கொடுத்திருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படி இருந்தால், எனது மச்சான் கிட்ட தங்கச்சி பணம் கேட்கக்கூடாது என்பதற்காகவும், உங்களை தொந்தரவு பண்ணக்கூடாது என்பதற்காகவும் தமிழகத்தில் பெண்களுக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவசம் என்று அறிவித்துள்ளோம். உங்கள் பணத்தை தான் மிச்சம் பண்ணி கொடுத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.  அமைச்சரின் பதிலால் செய்தியாளர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

இதையும் படிங்க: நடிகர் பார்த்திபன் தாக்கல் செய்த மனு.. தமிழக அரசிடம் பதில் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம்!!

இந்த பதிலை கேட்ட செய்தியாளர்கள் சிறிது நேரம் குழப்பம் அடைந்து இருந்தாலும், அங்கிருந்தவர்கள் சிரிக்கும் வகையில் அமைச்சரின் பதில் இருந்தது.

 ஏற்கனவே, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பயணி ஒருவர் போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் கோரிக்கை வைத்தார்.

அப்போது, தம்பி நீ நன்றாக சாப்பிட்டு இருக்கிறாய்.. நான் சாப்பிட கூட இல்லை.. என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டன. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், ஆண்கள் இலவச பேருந்து பயணம் தொடர்பாக அமைச்சர் தமிழன் பார்த்திபன் தெரிவித்த பதில் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சி காலத்தில் பெண்கள் குறிப்பிட்ட அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை, விரைவு பேருந்துகள் தவிர அனைத்து அரசு பேருந்துகளிலும் தவெக அரசு விரிவு படுத்தி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

இதையும் படிங்க: தமிழக கவர்னராகிறார் முன்னாள் ஆந்திரா முதல்வர்? கிரண் ரெட்டிக்கு வாய்ப்பு? மத்திய அரசு ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share