×
 

நாசம் செய்துவிடுவேன்! அமைச்சரை வைத்து நோண்டி எடுத்துடுவோம்! அதிகாரிகளை மிரட்டும் திமுக நிர்வாகிகள்!

கமிஷனுக்காக அதிகாரியை திமுக நிர்வாகிகள் மிரட்டுகின்றனர். கடமையைச் செய்யும் அதிகாரியை மிரட்டும் கமிஷன் மாடல் அரசு என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை புரசைவாக்கம் பகுதியில் மெட்ரோ வாட்டர் இணைப்பு கொடுத்ததற்கு லஞ்சம் வரவில்லை என்ற கோபத்தில் திமுக வட்டச் செயலாளர்கள் ரங்கநாதன், சேகர் ஆகியோர் உதவிப் பொறியாளரை தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி ஒலிப்பதிவை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டு, திமுகவின் “கமிஷன் மனநிலை” முழுமையாக ஊறிப்போய்விட்டதாக கடுமையாகச் சாடியுள்ளார்.

செங்கல், மணல், ஜல்லி கொட்டி வீடு கட்டினாலே ஆளுங்கட்சிக்காரர்கள் வசூலுக்கு வந்துவிடுவார்கள் என்று சென்னை மக்கள் பல நாள்களாகப் புலம்பி வருகிறார்கள். கஷ்டப்பட்டு சேர்த்து வீடு கட்டும் சாமானியர்களிடமும் அடாவடியாகக் கமிஷன் கேட்கும் போக்கு தொடர்கிறது என்ற குற்றச்சாட்டு இப்போது இந்த ஆடியோ மூலம் உறுதியாகிவிட்டது.

ஆடியோவில் திமுக நிர்வாகிகள் பேசுவது மட்டும் இல்லை, அப்பட்டமாக அரசு ஊழியரை அச்சுறுத்துகிறார்கள். “வேலையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் இணைப்பை உடனே துண்டிக்க வேண்டும்… துண்டிக்கவில்லை என்றால் அமைச்சரை வைத்து நோண்டி எடுத்துவிடுவோம்.. மெட்ரோ வாட்டரையே நாசம் செய்துவிடுவேன்” என்று தரக்குறைவாகப் பேசுகிறார்கள்.

இதையும் படிங்க: தென்காசியை உலுக்கிய கோர விபத்து..!! தனியார் பேருந்தின் உரிமம் ரத்து..!! கலெக்டர் அதிரடி உத்தரவு..!!

இது ஒரு தனிப்பட்ட சம்பவம் மட்டும் இல்லை, திமுகவின் ஒட்டுமொத்த அடாவடித்தனத்தையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் வெளிப்படுத்துவதாக நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: ஒரு புறம் மக்களுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதியையும் செய்து தராமல் கோபாலபுரத்தின் புகழை மட்டும் பாடிக்கொண்டிருக்கும் திமுக அமைச்சர்கள், மறுபுறம் தன் கடமையைச் சரியாகச் செய்யும் அரசு ஊழியர்களை மிரட்டி, லஞ்சம்-கமிஷன் வாங்கி மக்களின் பணத்தை ஒட்டுண்ணியைப் போல உறிஞ்சுகிறார்கள். இப்படி ஒரே அணியாகத் திரண்டு தமிழகத்தைச் சுரண்டும் திமுகவினர் அனைவருக்கும் ஆபத்து என்று எச்சரித்துள்ளார்.

இந்த ஆடியோ வெளியானதும் சென்னை முழுவதும் பொதுமக்கள் இடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. “எங்கள் பகுதியிலும் இதேதான் நடக்கிறது” என்று பலர் பகிரங்கமாகப் பேசத் தொடங்கியுள்ளனர். எதிர்க்கட்சிகள் இதை “கமிஷன் மாடல் ஆட்சி” என்று முத்திரை குத்தி பெரும் போராட்டத்தைத் தொடங்கத் தயாராகி வருகின்றன. தேர்தல் ஆணையமும், அமலாக்கத் துறையும் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவும் மற்ற எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

இதையும் படிங்க: வீட்டுக்கு வீடு சில்வர் ட்ரம், புடவை!! ட்ராக்டரில் வந்திறங்கும் பரிசு பொருட்கள்!! வாக்காளர்களை கவர திமுக திட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share