சூடுபிடிக்கும் அரசியல் களம்..! முதல்வர் ஸ்டாலின் 5ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம்..!! முழு விவரம்..!
முதல்வர் ஸ்டாலின் 5 ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். இந்த தொடர் பிரச்சாரத்தை தலைவர் மு.க. ஸ்டாலின் மார்ச் 31-ஆம் தேதி திருவாரூரில் தொடங்கிய நிலையில், ஐந்தாம் கட்ட பரப்புரையை ஏப்ரல் 13-ஆம் தேதி திருவள்ளூரில் தொடங்குகிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்டமாக திருவள்ளூரில் பரப்புரையை தொடங்குகிறார்.
அதன்படி, திங்கட்கிழமை ஏப்ரல் 13 ஆம் தேதி திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, பூவிருந்தவல்லி, ஆவடி, ராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு ஆகிய இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார். 14 ஆம் தேதி வேலூர், காட்பாடி, அணைகட்டு, கீழ்வைத்தியநாதன்குப்பம், குடியாத்தம், திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் பரப்புரை செய்கிறார்.
இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஊழல் தடுப்புத்துறை தலைவரா?... டி.ஆர். பாலு ஆவேசம்...!
15 ஆம் தேதி பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய இடங்களிலும், சேலம், ஆத்தூர், ஏற்காடு, கெங்கவல்லி, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி ஆகிய இடங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். 16 ஆம் தேதி நாமக்கல், ராசிபுரம், நாமக்கல், சேந்தமங்கலம், குமாரபாளையம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு ஆகிய இடங்களில் பரப்புரை செய்கிறார். பெரம்பலூர், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் பரப்புரை செய்கிறார்.
இதையும் படிங்க: தேர்தல் 2026: அதிக வாக்குகள் சேகரிக்கும் முகவர்களுக்கு 1 பவுன் தங்கம்! செந்தில் பாலாஜி அதிரடி!