×
 

கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களை குறி வைக்கும் பாஜக... கொதித்தெழுந்த மு.க.ஸ்டாலின்...!

மத சிறுபான்மை அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு இறங்கியுள்ளது

 வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட முன்வரைவு 2026 தாக்குதல் செய்யப்பட்டிருந்த நிலையில், அதனை கிறிஸ்தவ நிறுவனங்கள் மீதான நேரடி தாக்குதல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட முன்வரைவு 2026 என்ற பெயரில் மத்திய பாஜக அரசு மக்களவையில் மார்ச் 25ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக இந்த மசோதா முழுக்க முழுக்க கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களையும் தேவாலயங்களையும் பிற மத சிறுபான்மை தொண்டு நிறுவனங்களையும் குறிவைத்து தொடுக்கப்படும் நேரடி தாக்குதல் என முதலமைச்சர் தன்னுடைய எக்ஸ்தலத்தில பதிவிட்டுருக்கிறார்.

ஏற்கனவே வகுப்புவாரிய சட்ட திருத்தம் மூலம் இஸ்லாமிய சொத்துக்களை கபளீகரம் செய்ய பாஜக முயன்றதாகவும் தற்பொழுது மற்ற மத சிறுபான்மை அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு இறங்கியுள்ளது என முதலமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகளின் போராட்டத்தாலும், கிறித்தவர்கள் அதிக அளவில் வாழும் கேரளத்தில் தேர்தல் நடைபெற இருப்பதாலும் இப்போதைக்குப் பின்வாங்குவது போல நடித்து, விரைவில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டி இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற பா.ஜ.க. அரசு திட்டமிடுவதாக குற்றச்சாட்டியுள்ளார்.  இந்த முயற்சிகளைக் கைவிட்டு, பிரதமர் அவர்கள் இந்தத் தன்னிச்சையான, அநியாயச் சட்டத்திருத்தத்தை முற்றிலுமாகத் திரும்பப் பெறும் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக இந்த மசோதாவானது தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் பெறும் வெளிநாட்டு நிதியை கண்காணிக்கவும் வெளிப்படை தன்மை அதிகரிக்கவும் உதவும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவெளிநாட்டு நிதியை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும், அதிகாரம் மூலம் நிதியை நிர்வகிக்கவும், ஏதேனும் தவறு நடந்தால் சொத்துக்களை கையகப்படுத்தவும் மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் மசோதாவானது உருவாக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: எத்தன உருட்டு..? தேர்வு நடத்த கூட "வக்கற்ற திமுக அரசு"... விளாசிய அதிமுக..!

வெளிநாட்டில் இருந்து பெறப்படும் நிதியை பயன்படுத்துவதில் ஏதாவது தவறு நிகழ்ந்தால் அதற்கு அதிகபட்ச தண்டனையாக இருந்த ஐந்து ஆண்டுகளிலிருந்து ஒரு ஆண்டுகளாகவே குறைக்கப்படுகிறது. மேலும் இது குறித்து விசாரணை துவங்க வேண்டும் என்றால் முன்கூட்டியே மத்திய அரசிடம் ஒப்புதலை பெற வேண்டும் போன்ற பல்வேறு அம்சங்கள்  இந்த மசோதாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 

இதையும் படிங்க: திமுக வாக்குறுதிகள் தரமா இருக்கும்… BJP பாதம் தாங்கி EPS..! லெஃப்ட் ரைட் வாங்கிய முதல்வர் ஸ்டாலின்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share