×
 

சூடு பிடிக்கும் அரசியல் களம்... முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்!

டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லி புறப்படுகிறார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளார்.

ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதி இன்னும் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. மொழிக் கொள்கை விவகாரத்தின் காரணமாக கல்வி நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ உள்ளிட்ட பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரங்கள் குறித்தும் இதற்கான நிதி வழங்கவும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: ரூ.457 கோடியில் காவலர் குடியிருப்புகள்.. முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வைத்தார்..!

புதிய கட்டடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்டவை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசிடம் இருந்து நிதி பெற வலியுறுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. முதலமைச்சரின் டெல்லி பயணத்தை கடுமையாக விமர்சித்து இருந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. காரணம்...,கடந்த காலங்களில் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக கூறி நிதி ஆயோக் கூட்டத்தை திமுக அரசு புறக்கணித்ததாகவும் தற்போது தனது குடும்பத்திற்காக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதாகவும் விமர்சனத்தை முன் வைத்தார்.

இதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலினும் பதிலடி கொடுத்திருந்தார். இப்படி மாறி மாறி பேசி வரும் நிலையில் முதல்வரின் டெல்லி பயணம் பெரும் அரசியலாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள நிதி ஆயோ கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று டெல்லிக்கு செல்ல உள்ளார்.

இதையும் படிங்க: வெளுத்து வாங்க போகுது மழை..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஆலோசனை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share