×
 

டெல்லிக்கு ஷாக்... சொன்ன படியே அதிரடி காட்டிய ஸ்டாலின்... கருப்பு உடையில் மசோதா நகலை எரித்து மாஸ்...!

தமிழக முழுவதும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற தமிழக முதல்வரும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்தார். 

மத்தியஅரசு நாடாளுமன்றத் தொகுதி வரையறை சட்ட திருத்த மசோதா தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது . இதன் காரணமாக தமிழகத்தில்  தொகுதிகள் குறைக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறி தமிழக முழுவதும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற தமிழக முதல்வரும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்தார். 

பா.ஜ.க அரசின் தொகுதி மறு வரையறை என்ற கருப்பு சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் வீதிகளிலும் இன்று கருப்பு கொடி ஏற்றுவோம் என தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வர் திரு மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். 

 அதன்படி நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லி பாளையத்தில் உள்ள மாநகர அவைத் தலைவர் செல்லப்பன் என்பவரது வீட்டு முன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருப்பு கொடி ஏற்றினார். கருப்பு உடையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருப்புக்கொடி ஏற்றி வைத்தார். அப்போது அங்கிருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  “பறிக்காதே... பறிக்காதே மாநில உரிமையை பறிக்காதே...”, “தமிழ்நாடு போராடும்”, “தமிழ்நாடு வெல்லும்” என கோஷங்களை எழுப்பினர். 

இதையும் படிங்க: கலைஞர் சிலை டூ கலெக்டர் ஆபீஸ் வரை... கமல், பிரேமலதாவுடன் கைகோர்ந்து நடந்த சி.எம். மு.க.ஸ்டாலின்...!

அதனைத் தொடர்ந்து தொகுதி மறுவரை நகலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீயிட்டு கொழுத்தினார். இதனையடுத்து சென்னையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திலும் கருப்புக்கொடி ஏற்றினார். திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கருப்பு சட்டை அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட காந்திநகர் ஆறாம் வீதியில் ஒன்றிய பாஜக அரசின் தொகுதி   மறு வரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பத்துக்கும் மேற்பட்ட இல்லங்களில் கருப்புக்கொடி கட்டிவைத்து தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர். 

இதையும் படிங்க: அலறும் தமிழ் பெண்கள்..! கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா..? திமுகவை புரட்டி எடுத்த நயினார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share