×
 

சாட்டையை சுழற்ற தயாராகும் ஸ்டாலின் ... திமுக முக்கிய அமைச்சரின் பதவி விரைவில் பறிப்பு?

திமுக அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவரை பதவியில் இருந்து விலக்குவது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணியை திமுக தொடங்கி உள்ளது. அந்த வகையில் கட்சியில் முக்கிய பதவிகளை சீரமைக்கும் வேளையிலும் அண்ணா அறிவாலயம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பெண்கள் குறித்து சர்ச்சையான வகையில் கருத்து தெரிவித்ததற்காக அமைச்சர் பதவி, கட்சி பதவி என அனைத்தையும் இழந்தார் பொன்முடி. விழுப்புரத்தில் ராஜாவாக வலம் வந்த பொன்முடி, தனது சொந்தக் கட்சியினராலேயே போஸ்டர்களில் கூட புறக்கணிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் மனம் தளராமல் பல கட்ட முயற்சிகளை மேற்கொண்ட பொன்முடிக்கு தற்போது மீண்டும் திமுக துணை பொதுச்செயலாளர் பதவி கிடைத்துள்ளது.

இதனிடையே திமுக அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவரை பதவியில் இருந்து விலக்குவது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, "தனது துறைக்கு குறைவான நிதி ஒதுக்கப்படுவதாகவும், பிற மாநிலங்களைப் போல அனைத்து தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் தனது துறையின் கீழ் இயங்கவில்லை என்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.

இதையும் படிங்க: நெல்லை திமுக கோட்டையா இருக்கணும்! நிர்வாகிகளுக்கு கறார் காட்டிய முதல்வர்...!

தன்னுடைய அமைச்சரவைக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாதது குறித்து, சட்டமன்றத்துக்குள்ளேயே விமர்சனத்துடன் பி.டி.ஆர் பேசிய பேச்சு விவாதப் பொருளாகியிருந்தது. இந்த நிலையில்தான், ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பழனிவேல் தியாகராஜனின் விமர்சனத்துக்கும் வருத்தத்துக்கும் பதில் சொல்வதைப் போல சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதாவது, "நம்முடைய பழனிவேல் தியாகராஜனைப் பொறுத்தவரை அறிவார்ந்த வலிமையான வாதங்களை வைக்கக்கூடியவர். நான் அவருக்குக் கூற விரும்புவது இந்தச் சொல்லாற்றல் அவருக்குப் பலமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, அவரின் பலவீனமாக ஆகிவிடக்கூடாது" என மறைமுகமாக எச்சரிக்கும் தொனியில் பேசி இருந்தார். 

அதன் பின்னர் அமைதி காத்து வந்த பிடிஆர், சில தினங்களுக்கு முன்பு மதுரை சாக்கடை பிரச்சனை குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது..மதுரை மஞ்சமேடு பகுதியில் எதிர்க்கட்சியாக இருக்கும் போதே சாக்கடை கால்வாய் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்ட நிலையில், தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் போது மீண்டும் அதே பிரச்சனை எப்படி வந்தது என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். ஏற்கனவே மதுரை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற வரி மோசடி விவகாரத்தை கையில் எடுத்து பாஜகவும் அதிமுகவும் கடுமையாக திமுக அரசை விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் ஆளுங்கட்சி அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜனே தனது சொந்தக் கட்சியை குறை கூறுவது போல் கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதனால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரின் வெறு வாய்க்கு அவில் கொடுத்தது போல் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியிருப்பது திமுக சீனியர்களையும் கடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இதனால் பிடிஆரின் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. திமுக தலைமையுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் ஈ பி ஆர் ஐ பதவியை விட்டு தூக்கலாமா? ஸ்டாலின் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது அறிவாலயத்தில் அதிர்வலையை உருவாக்கியுள்ளது.

இதையும் படிங்க: "மகனே! இனிதான் சூதானமா இருக்கனும்..." கதிர் ஆனந்திற்கு அப்பா துரைமுருகன் கொடுத்த முக்கிய அட்வைஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share