×
 

என்றும் ஹிந்திக்கு இடமில்லை! மொழிப்போர் தியாகிகள் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!

என்றும் ஹிந்திக்கு இடமில்லை என்று முதல்வர் ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்தார்.

மொழிப்போர் தியாகிகள் தினம் தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமானதும், உணர்ச்சி நிறைந்ததுமான நினைவு நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 அன்று இந்த தினம் மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், தமிழ் மொழியைப் பாதுகாக்கவும், இந்தி மொழியை கட்டாயமாகத் திணிக்க முயன்ற மத்திய அரசின் கொள்கைக்கு எதிராகவும் தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் நாளாகும்.

இந்தி மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக முழுமையாக அமல்படுத்துவது என்ற முடிவு அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. திமுக, திராவிடர் கழகம், மாணவர் அமைப்புகள், பொதுமக்கள் என அனைவரும் தெருவுக்கு இறங்கினர். ரயில்கள் தீவைப்பு, அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல், பதாகைகள் எரிப்பு போன்ற போராட்டங்கள் தீவிரமடைந்தன. குறிப்பாக ஜனவரி 25 அன்று போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டின. அப்போது, தியாகிகளில் பலர் தீக்குளித்து உயிரிழந்தனர்.

இதனிடையே, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதி மொழிப்போர் தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர்த் தியாகிகள் தாளமுத்து, நடராஜன் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க: பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்..! பாதகம் வராது என நம்புவதாக அறிவிப்பு..!

மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர்த் தியாகிகள் நினைவிடம் நோக்கி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணியாக சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் கருப்பு நிற உடையில் சென்று மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர். மேலும், டாக்டர் எஸ்.தருமாம்பாள் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்., அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது என்று கூறினார். தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன் என்றும் மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது., நம் தமிழுணர்வும் சாகாது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேலூரில் போராட்டம் அறிவித்த அதிமுக..! முந்தி கொண்ட எம்எல்ஏ..! ஹாஸ்பிடல் திறப்பு தேதி அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share