#TNElectionResults2026: 14வது சுற்றிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவு... அதுவும் இத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசமா?
இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கையானது அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக ஒரு தொகுதிக்கு ஒன்று வீதம் 234 வாக்கு எண்ணும் அறைகளும், தபால் வாக்குகளை எண்ணுவதற்காக கூடுதலாக 240 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கையானது அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை 15 சுற்றுகள் நடைபெறவுள்ள நிலையில், 14வது சுற்றுகள் வரையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார். கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து மூன்று சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பாக மு.க. ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ளார். இதனையடுத்து தற்போது நான்காவது முறையாக கொளத்தூர் தொகுதியில் களமிறங்கியுள்ளார்.
இந்த தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக வேட்பாளர் சந்தான கிருஷ்ணன், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சவுந்திர பாண்டியன் ஆகியோர் போட்டியிட்டனர். முதலமைச்சர் தொகுதி என்பதால் இங்கு மு.க. ஸ்டாலினுக்கே அதிக வெற்றி வாய்ப்புள்ளதாக இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகள் அனைத்து தெரிவித்துள்ளன. இதன் காரணமாக நான்காவது முறையாக கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் வெற்றி வாகை சூடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அனைத்து கணிப்புகளையும் தவிடுபொடியாக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
இதையும் படிங்க: மீண்டும் ஸ்டாலின் தான்..! சிறுவாபுரி முருகனை தரிசித்த அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை..!!
கொளத்தூரில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு 7,730 வாக்குக்ள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 13வது சுற்று முடிவில் ஸ்டாலின் 8,061 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார். அதேசமயம் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு 52,565 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இதையும் படிங்க: நெனச்ச மாதிரியே நடந்துருச்சு..! வணிக சிலிண்டர் விலை உயர்வு..! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!