தனி விமானத்தில் பீகார் பறந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... இன்று ராகுல் காந்தியுடன் இணைந்து நடைபயணம்...!
ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகாருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
“வாக்காளர் உரிமை யாத்திரை” என்ற பெயரில் பீகாரில் நடைபெறும் ராகுல் காந்தியினுடைய பிரச்சார பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கவுள்ளார். அதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தற்போது பீகார் புறப்பட்டிருக்கிறார். பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றசாட்டை ராகுல் காந்தி முன்வைத்தார். இதற்காக கடந்த 17ஆம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக 1300 கிலோ மீட்டர் தூரத்திற்கு பீகார் மாநிலத்தில் இருந்து நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த நடைபயணத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் ஒவ்வொரு நாளும் கலந்து கொண்டு வருகிறார்கள்.
அதன் அடிப்படையிலே இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் தேர்தல் எதிராக வைத்திருக்கிறார். அதில் பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்து கொண்டு தேர்தல் ஆணயம் பல்வேறு வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ஒரு பரபரப்பு குற்றசாட்டை ராகுல் காந்தி முன்வைத்தார். இந்திய தேர்தல் ஆணயத்தின் மீது ராகுல் காந்தி வைத்த இந்த குற்றச்சாட்டு என்பது மிகுந்த கவனத்துக்குரிய ஒரு குற்றச்சாட்டாகவும் தேசிய அளவில் பரபரப்பான பிரச்சனையாகவும் பார்க்கப்படுகிறது.
பீகாரில் வருகின்ற தேர்தல் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், இதுவரை 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது என்றும் இதற்கு பல்வேறு காரணங்களையும் சுட்டிக்காட்டி அவர் தன்னுடைய செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். அதில் பீகாரில் தேர்தல் ஆணயத்தால் இறந்தவர்கள் என்று நீக்கப்பட்டவர்களுடன் தற்போது தேநீர் அருந்து கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் ராகுல் காந்தி வெளியிட்ட சோசியல் மீடியா பதிவு ட்ரெண்ட் ஆனது.
இதையும் படிங்க: மக்கள் உரிமை யாத்திரை... தொண்டர்கள் சூழ ராகுல், தேஜஸ்வி யாதவ் பைக் பயணம்
அதாவது 2023 நடந்த கர்நாடகா தேர்தலின் போது வாக்கு திருட்டில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டதாகவும், அதேபோல பாஜகவுக்கு ஆதரவாக 2024 நாடாளுமன்ற தேர்தலின் போதும் பல்வேறு இடங்களில் தேர்தல் ஆணயம் ஆதரவாக செயல்பட்டது என்றும், நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தலிலும் தேர்தல் ஆணயம் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் பல்வேறு குற்றசாட்டை ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். முக்கியமாக பெங்களூர் மத்திய தொகுதியில் நடந்த முறைகேடு குறித்து தரவுகளையும் அவர் செய்தியாளரின் சந்திப்பின் போது வெளியிட்டார்.
இதனிடையே சட்டப்பேரவை தேர்தலை எதிரோக்கியுள்ள பீகாரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் என்ற பெயரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ய இந்தியா கூட்டணியில் இருக்கக்கூடிய அனைத்து தலைவர்களையும் ஒருங்கிணைத்து தற்போது இந்த பேரணியை ராகுல் காந்தி முன்னெடுத்து வருகிறார். இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ள நிலையில், இதே நடைபயணத்தில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமைய்யாவும் பங்கேற்கிறார்.
மேலும் அகிலேஷ் யாதவ், ஜார்கண்ட் முதல்வர் ஹேமாசரன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த ரெட்டி, இமாலத்தினுடைய முதல்வர் சுக்கிந்தர் சுக மற்றும் எதிர்கட்சி தலைவர்களும் பல்வேறு பேர் ஒவ்வொரு நாளும் இந்த பேரணையில் கலந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கான்ஸ்டபிள் மீது மோதிய வாகனம்.. ராகுல் காந்தியின் டிரைவர் மீது பாய்ந்த FIR..!!