'தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு' பறிபோனது 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள்?! வெளுத்து வாங்கும் மு.க.ஸ்டாலின்!
ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கான 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு இடங்கள் இழக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தில் தமிழக அரசு அரசு மருத்துவர்களுக்கும் பொதுமக்களுக்கும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அந்த பதிவில், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை திமுக போராடிப் பெற்றுத் தந்ததை நினைவுகூர்ந்த அவர், தற்போது மருத்துவக் கல்வியில் தமிழ்நாடு தனது முக்கியமான இடங்களை இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்தாரா மு.க.ஸ்டாலின்? விசாரணை கோரி வழக்கு!
மேலும், தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாறிய நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் போதுமான வாதங்கள் முன்வைக்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது. ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) July 29, 2026
தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக்… https://t.co/2aKZEgP2eU
தமிழக அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை, வழக்கின் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன் காட்டப்பட்டது, மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் ஏன் தாமதம் ஏற்பட்டது என்பன உள்ளிட்ட பல கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.
அதேபோல், அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று தொடங்கும் முன்பே மாநில அளவிலான கலந்தாய்வை அவசரமாக நடத்தி, 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்ட நடவடிக்கையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன் என்றும், கடந்த மே 29, 2026 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவின் தற்போதைய நிலை என்ன என்றும் விளக்கம் கோரியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அரசு மருத்துவர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருவதாகவும், எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் பணியாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை மாநிலம் இழந்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது இலட்சக்கணக்கான மக்களின் மருத்துவ சேவையை பாதிக்கும் முக்கிய பிரச்சினை என்பதால், தமிழக அரசு இந்த விவகாரத்தில் வெளிப்படையான விளக்கத்தை மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
இதுவரை, மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: திமுகவில் நீக்கப்பட்ட 150 பேருக்கு மீண்டும் வாய்ப்பு! மு.க.ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு! புதிய அரசியல் நகர்வு!