×
 

#BREAKING தவெக ஆட்சி அமைத்ததில் இருந்தே... விடிந்ததுமே விஜய் அரசுக்கு இடியை இறக்கிய ஸ்டாலின்...!

கடந்த முறை ரூ.300 அளவில் மின் கட்டணம் செலுத்தியவர்கள், இந்த மாதம் ரூ.800-க்கும் அதிகமாக கட்டணம் வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, முதலமைச்சர் ஜோசப் விஜய் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக வீட்டு மின் நுகர்வோருக்கான இலவச மின்சார சலுகையை அறிவித்தார். அதன்படி, 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும், 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு முந்தைய நடைமுறையைப் போல 100 யூனிட் இலவச சலுகை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருந்தாலும், சமீபத்தில் வெளியான ஜூலை மாத மின்கட்டணப் பட்டியல்கள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. முந்தைய மாதங்களில் செலுத்திய தொகையை விட இந்த முறை இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு பகுதிகளில் இருந்து புகார்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, கடந்த முறை ரூ.300 அளவில் மின் கட்டணம் செலுத்தியவர்கள், இந்த மாதம் ரூ.800-க்கும் அதிகமாக கட்டணம் வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். 200 யூனிட் இலவச மின்சார சலுகை அமலில் இருந்தபோதும், எதிர்பார்த்ததை விட அதிக தொகை கட்டணமாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் பலர் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து, சமூக வலைதளங்களிலும் மின் கட்டண ரசீதுகளை பகிர்ந்து பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மருத்துவ படிப்பில் தமிழகத்தின் இடங்கள் இழப்பு...; சரண்டர் ஆனது ஏன்..? தவெக அரசை பூந்து விளாசிய ஸ்டாலின்..!!

இந்த நிலையில், எழுந்துள்ள புகார்களை தீவிரமாக எடுத்துக்கொண்ட தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் அருண் ராய், மாநிலம் முழுவதும் 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்படி, முதன்மை பொறியாளர்கள் தலா 25 மின் இணைப்புகளையும், உதவிப் பொறியாளர்கள் தலா 100 மின் இணைப்புகளையும் நேரடியாக ஆய்வு செய்து, மின் பயன்பாடு மற்றும் கட்டண கணக்கீடு சரியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆய்வுப் பணிகள் அனைத்தும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் நிறைவடைந்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறு ஆய்வின் போது கணக்கீட்டில் பிழைகள் அல்லது தவறுகள் கண்டறியப்பட்டால், அவற்றை உடனடியாக சரிசெய்து உரிய திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மின்சார வாரிய தலைவர் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கையின் மூலம் பொதுமக்களின் புகார்களுக்கு தீர்வு காணப்படுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்துள்ளதோடு, மின் கட்டண பிரச்சனையை சரிய செய்யும் வரை கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில், த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்... முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை. 3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது. இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும். இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க: கல்வியிலும் விளையாட்டிலும் தமிழகம் உயரட்டும்.. வெள்ளி வென்ற வீரருக்கு ஸ்டாலின் பாராட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share