×
 

“இப்படி பேசி மாண்பை இழந்துடாதீங்க” - தமிழனாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்...! 

பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்களை தமிழ்நாட்டில் உள்ள திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என பிரதமர் மோடி பேசியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

பீகார் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி தமிழ்நாடு குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியின் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, கூட்டணியில் உள்ள கட்சிகள் பீகார் மக்களை இழிவுபடுத்துவதாகவும், ஆனால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) அத்தகைய தலைவர்களை பீகாருக்குப் பிரச்சாரத்திற்காக அழைப்பதாகவும் சாடினார். 

தொடர்ந்து பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி,“கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்களை இழிவுபடுத்திப் பேசியுள்ளனர் என்று பிரதமர் குற்றம் சாட்டினார். இது பீகாரின் உழைப்புக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று அவர் குறிப்பிட்டார். காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும் தமிழ்நாட்டில், வேலைக்காகச் சென்றுள்ள பீகாரைச் சேர்ந்த கடின உழைப்பாளிகள் துன்புறுத்தப்படுவதாகவும், தவறாக நடத்தப்படுவதாகவும்” விமர்சித்தார். 

இதனையடுத்து சோசியல் மீடியாக்களில் "தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்களை திமுகவினர் துன்புறுத்தி வருவதாக" தேர்தல் பிரச்சார மேடையிலேயே வெறுப்பு பேச்சை கக்கி இருக்கிறார் என பிரதமர் மோடிக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: தென்னை விவசாயிகள் பெருமூச்சு… வாடல் நோயை கட்டுப்படுத்த குழு..! அண்ணாமலை பெருமிதம்…!

இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே திரு.நரேந்திர மோடி  அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக்குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… 8வது ஊதிய குழுவுக்கு அங்கீகாரம்… மத்திய அரசு அறிவிப்பு…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share