×
 

வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி..! டாடா நிறுவனத்தை புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர்..!

சொகுசு கார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி வைத்த முதல் அமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட்ரோவர் சொகுசு கார்கள் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. Tata மோட்டார்ஸ் கார் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது, இந்த நாள் தமிழ்நாட்டிற்கும், தமிழக தொழில்துறைக்கும், டாடா குழுமத்திற்கும் ஒரு பொன்னான நாள் என்று தெரிவித்தார்.

5000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் டாடா நிறுவனத்தின் ஆலை தமிழ்நாட்டிற்கு வந்ததில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். உலக அளவில் பல்வேறு நாடுகளில் செயல்படும் இந்திய பன்னாட்டு குழுமமாக டாடா நிறுவனம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்தியாவின் தொழில் முகங்களில் முக்கியமான நிறுவனம் டாடா என்றும் உலகத் தரம் வாய்ந்த டாடா நிறுவனத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் மிகச் சிறந்த பிணைப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து டாடா நிறுவனத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியிருந்தார். இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் என்றால் அது தமிழ்நாடு தான் என்றும் குறிப்பிட்டார். மின்சார வாகன உற்பத்தி மற்றும் மோட்டார் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வை முதலமைச்சர் ஸ்டாலின் புகழ்ந்து பேசினார். உலகப் புகழ்பெற்ற ரேஞ்ச் ரோவர் கார் இங்க தயாரிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சொகுசு கார் உற்பத்தி தொழிற்சாலை தொடக்கம்... ரேஞ்ச் ரோவர் காரை ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்..!

டாடா குழுமத்தின் உற்பத்தி தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே வளர்ச்சிக்கு வித்திடும் என்று தெரிவித்தார். தமிழ்நாடு அரசு ஒரு வாக்குறுதி கொடுத்தால் அதை எப்படி காப்பாற்றுகிறது என்பதை மாநாடு எடுத்துரைக்கும் என்றும் கூறியுள்ளார். பிற மாநிலங்களுடன் இல்லாமல் உலக நாடுகளுடன் போட்டியிடும் நிலைக்கு தமிழ்நாடு சென்று இருப்பதாகவும் குறிப்பிட்டார். 

இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களுக்கு உணவு..! விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share