×
 

பாஜக ஆளாத மாநிலங்களுக்கு கவர்னர்கள் இடையூறு... ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!

தனது உரை நிகழ்த்தாமல் வெளியேறிய கவர்னர் ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. தமிழக சட்டமன்றத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்குச் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்தில் தொடங்கி உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து உடன் சட்டப்பேரவை கூடிய நிலையில் நான்காவது ஆண்டாக ஆளுநர் உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் உரையை படிக்காமல் வெளியேறி இருந்த நிலையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும் ஆளுநர் ரவி உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளார். ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியே சென்ற நிலையில், தேசிய கீதம் பாடாமல் தன்னை அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே, உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறியது அரசமைப்பை மீறிய செயல் என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஆளுநர் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல எனவும் முதல்வர் குறிப்பிட்டார். மக்கள் சபையை ஆளுநர் அவமதித்துள்ளதாக சட்டப்பேரவையில் முதல் பஸ் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.

இதையும் படிங்க: #BREAKING: அவமானப் படுத்துறீங்களா? சட்டசபையை விட்டு வெளியேறிய ஆளுநர் ரவி... பரபரப்பு..!!

உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியதை பேரவை ஏற்கவில்லை என்றும் ஆளுநரின் நடவடிக்கையை ஒருநாள் செய்தியாக நினைத்து கடந்துவிட முடியாது எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜக ஆளாத மாநில அரசுகளுக்கு இடையூறாக இருப்பது ஆளுநர்களின் வாடிக்கையாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். மரபை மீறி தனது உரையை வாசிக்காமல் சட்டசபையை விட்டு வெளியேறிய ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொது மேடைகளில் அரசியல் பேசி அவதூறு பரப்பி வருவதாக ஆளுநர் ரவி மீது குற்றம் சாட்டினார். தொடர்ந்து முதலமைச்சர் நிறைவேற்றிய தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இதையும் படிங்க: பிப்.7ல் திமுக இளைஞரணி சந்திப்பு... பிரம்மாண்ட நிகழ்வில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share