×
 

வாயை திறந்தாலே பொய்! நிரந்தரமா குட்பை சொல்ல போறாங்க... இபிஎஸ்ஐ வகுந்தெடுத்த ஸ்டாலின்..!

எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக மக்கள் நிரந்தரமாக குட் பை சொல்வார்கள் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார்.

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மயிலாடுதுறை சென்றார். 48 புள்ளி 17 கோடி செலவிலான 47 முடிவுற்ற பணிகளை அவர் திறந்து வைத்தார். மேலும் 271 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 54 ஆயிரத்து 461 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, மயிலாடுதுறையில் நடைபெற்ற அரச நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அப்போது உரையாற்றிய அவர், தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் மீது மத்திய பாஜக அரசுக்கு அக்கறையில்லை என குற்றம் சாட்டினார்.  விமர்சனம் என்ற பெயரில் நமக்காக விளம்பரம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக அவர் அவதூறு பரப்பி வருவதாகவும் திமுக ஆட்சி திட்டங்கள் அதிமுக காரர்கள் வீட்டுக்கும் போகிறது என்பதை இபிஎஸ் அவர்களால் மறுக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

தேர்தலுக்கு முன் பெட்ஜீட் போட்டு வாங்கிய மனுக்களை, எக்சல் சீட்டாக மாற்றி ஒர்க்ஷீட் ஆக மாற்றினேன் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பெற்ற மனுக்களை முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார் என்ற எடப்பாடி பழனிச்சாமி என் கேள்விக்கு பதில் அளித்தார். மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திமுக அரசின் அனைத்து திட்டங்களும் அதிமுகவை சேர்ந்தவர்களையும் சென்றடைகிறது.

தமிழக மக்கள் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிச்சாமிக்கு டாட்டா - பை பை சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்றும் சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் இருந்து வரும் புகை போல இபிஎஸ் வாயிலிருந்து பொய்யாக வருவதாக விமர்சித்தார். வரும் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் நிரந்தரமாக குட் பை சொல்வார்கள் என்றும் கூறினார். ரைடிலிருந்து தனது குடும்பத்தினரை பாதுகாக்க பாஜகவிடம் அதிமுகவை அடமானம் வைத்தவர் இபிஎஸ் என்றும் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: #BREAKING: த.வா.க நிர்வாகி ஓட ஓட விரட்டிப் படுகொலை... தலையை சிதைத்து பழிதீர்த்த மர்ம கும்பல்!

இதையும் படிங்க: திமுகவினராக இருந்தாலும் சும்மா விடமாட்டேன்... எச்சரித்த செந்தில் பாலாஜி... கலக்கத்தில் கரூர் உ.பி.க்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share