×
 

கதறும் சீனியர்கள்... பதறும் கூட்டணி கட்சிகள்... உதயநிதியின் அரசியல் எதிர்காலத்திற்காக ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு...!

திமுக கூட்டணி கட்சிகளுக்காக 80 சீட்களை ஒதுக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வர உள்ள சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி வாகை சூட வேண்டும் என்ற டார்க்கெட் உடன் திமுக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. போன தேர்தலில் கிட்டத்தட்ட 173 தொகுதிகளில் திமுக போட்டியிட்டது. மீதமுள்ள 61 தொகுதிகள் தான் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. அதில் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட்டார்கள். ஆனால் இந்த நிலைமை அப்படி கிடையாது. வேற மாதிரி பரபரப்பை கூட்டிக் கொண்டிருக்கு. ஒரு பக்கம் கூட்டணி கட்சியினர் அதிக தொகுதிகளை டிமாண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தேமுதிக புதிதாக திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திமுக கூட்டணி கட்சிகளுக்காக 80 சீட்களை ஒதுக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதனிடையே, மதிமுக போன்ற கட்சிகள் தங்களுக்கு தனி சின்னத்தில் தான் போட்டிடுவோம் , உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர். இன்னொரு பக்கம் உட்கட்சிக்குள்ளேய ‘எங்களுக்கான கோட்டாப்படி தொகுதியில ஒதுக்கிடுங்க,’ அப்படின்னு குரல்கள் ஓங்கி ஒலிக்க தொடங்கி இருக்கு. 

அதில் முதல் ஆளாக குரல் கொடுத்திருப்பது துணை முதலமைச்சரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய டீம் தானாம். கிட்டத்தட்ட ஒரு 40 தொகுதிகள் அவங்களுடைய கோட்டாவுக்கு  ஒதுக்க வாய்ப்பு இருக்கு எனக்கூறப்படுகிறது. அதைப் பற்றி தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக சிந்தித்து வருகிறாராம். அதாவது தென்மாவட்டங்களில் 10, சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில்10, வட மாவட்டங்களில் 10, டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு மண்டலத்தில் தலா ஐந்து, ஐந்து தொகுதிகள் வீதம் கிட்டத்தட்ட 40 தொகுதிகளை ஒதுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: நல்லாருக்கு உங்க நியாயம்! இதுக்கு திமுக காரங்க மேல CASE போட்டீங்களா? வலுக்கும் விமர்சனங்கள்…!

இதற்காக 70 தொகுதிகள் வரை பட்டியல் எடுத்து, அதில் 40 பைனல் செய்யலாம் என உதயநிதி ஸ்டாலின் தரப்பு இருக்காங்களாம். இந்த 70 தொகுதிகளில் தீவிரமாக இப்போது உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது டீம் வேலை பார்க்கவும் தொடங்கிட்டாங்க. அடிக்கடி உதயநிதி ஸ்டாலின் அங்க வரப்போறாரு அப்படிங்கிறாங்க. ஒரு உதாரணமா சொல்லணும் அப்படின்னா ராமநாதபுரம், மதுரை மேற்கு, உசிலம்பட்டி, சென்னையில் வேளச்சேரி, அப்புறம் பெரம்பூர் இன்னொரு பக்கம் டெல்டா எடுத்துக்கிட்டோம்னா தஞ்சாவூர், மன்னார்குடி அப்படின்னு இந்த தொகுதிகள் எல்லாம் அவங்களுடைய லிஸ்டில் இருக்கிறது எனக்கூறப்படுகிறது. 

உதயநிதிக்கு என தனியாக ஒரு விசுவாசமான கூட்டத்தை உருவாக்கணும். குறிப்பாக தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும் அவருடைய ஆதரவாளர்களாக எம்பிக்கள் இருக்கணும், எம்எல்ஏக்கள் இருக்கணும், கட்சியில் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் இருக்கணும். அதுதான் அவருடைய அரசியல் எதிர்காலத்துக்கு உதவியாக இருக்கும் அப்படின்னு ஸ்கெட்ச் போட்டு அறிவாலய தலைமை வேலை செஞ்சிக்கிட்டு இருக்காங்களாம் உடன் பிறப்புகள். 

இதையும் படிங்க: எதே திமுக VS தவெக- வா? அய்யாசாமி பரீட்சை எழுத்திட்டு வாங்க பேசலாம்… விளாசிய அதிமுக மாஜி அமைச்சர்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share