பாஜக வேட்பாளர் தகுதி நீக்கமா? - கிரிமினல் வழக்கை மறைத்த கிருத்திகா... தேர்தல் ஆணையத்திற்கு பறந்த மனு...!
மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகாவை தேர்தலில் தகுதி நீக்கம் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவக்குமார், அனுமதி இன்றி பள்ளி நடத்தி மாணவர்களுக்கு போலி சான்றிதழ் வழங்கியதாக நிலுவையில் உள்ள குற்ற வழக்கை மறைத்து தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர், பாஜக வேட்பாளர் கிருத்திகாவை தேர்தலில் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்..
மொடக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவக்குமார், தி இந்தியன் பப்ளிப் பள்ளியின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இந்த பள்ளியின் கிளை திருநெல்வேலியில் இயங்கி வந்த நிலையில், அரசின் அனுமதி பெறாமல் பள்ளியை நடத்தியதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட 63 குழந்தைகளுக்கு போலியான மாற்று சான்றிதழ்கள் வழங்கியதாகவும், திருநெல்வேலி பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 2025 ஜூலை 6.ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கிருத்திகா பெயர் குறிப்பிடாமல் அவரது பதவியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏமாற்றி மோசடி செய்தல் BNS 318(4) சட்டப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், மொடக்குறிச்சி தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில், நிலுவையில் உள்ள இந்த மோசடி வழக்கை மறைத்துள்ளதாக கூறி தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், ஈரோடு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கந்தசாமியிடம் மனு அளித்துள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரது வேட்பு மனுவை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: இத மட்டும் செஞ்சுட்டீங்கன்னா!! பிரதமர் மோடியை நேர்ல பாக்கலாம்!! அதிரடி ஆஃபரை அறிவித்தது பாஜக!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாடு கல்வித்துறையின் அனுமதி இல்லாமல் பள்ளியை தொடங்கி மூன்று ஆண்டுகள் சட்டவிரோதமாக திருநெல்வேலியில் பள்ளியை இயங்கியதாகவும் உரிய நடைமுறையை பின்பற்றாததால் அது மூடப்பட்டதாகவும் பெற்றோரை ஏமாற்றி போலி மாற்றுச் சான்றிதழ் இல்லை கிருத்திகா சிவக்குமார் வழங்கியதாகவும் தெரிவித்தார் மேலும் இந்த வழக்கு தொடர்பாக விபரங்களை மறைத்து கிருத்திகா சிவக்குமார் வேட்பு மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும் அவரை நிராகரித்து தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: இபிஎஸ் இங்க இல்ல! அடுத்த ஜென்மத்துல குஜராத்ல பிறக்கட்டும்! வெளுத்து வாங்கிய கனிமொழி!