பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி பேச்சு!! என்ன பேசினர் இருவரும்!! இணையத்தை கலக்கும் வீடியோ!
டெல்லியில் இன்று பார்லி வளாகத்தில் பிரதமர் மோடியும், எதிர்க்கட்சி தலைவர் ராகுலும் நேருக்கு நேர் சந்தித்தனர். ஒரு சில நிமிடங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
டெல்லி: இன்று ஏப்ரல் 11, இந்திய அரசியல் களத்தில் அரிதான ஒற்றுமை காட்சி ஒன்று பார்லிமென்ட் வளாகத்தில் நிகழ்ந்தது. மகாத்மா ஜோதிராவ் புலேவின் 200வது பிறந்த நாள் முன்னிட்டு, அவரது சிலைக்கு மரியாதை செலுத்த வந்த பிரதமர் நரேந்திர மோடியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நேருக்கு நேர் சந்தித்து சில நிமிடங்கள் உரையாடினர். இந்தக் காட்சியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாத்மா ஜோதிராவ் புலே, இந்தியாவின் சமூக சீர்திருத்த வரலாற்றில் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர். 1827ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், சாதி பாகுபாட்டை எதிர்த்து, பெண்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் கல்வி உரிமையை வலியுறுத்தி தொடர்ந்து போராடினார்.
சத்தியசோதக் சமாஜத்தை நிறுவிய அவர், சமூக நீதிக்காக தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தார். அவரது போதனைகள் இன்றும் பலருக்கு வழிகாட்டியாக இருக்கின்றன
இதையும் படிங்க: அதிரடி சோதனை..! ரூ.9 கோடி மதிப்புள்ள வைரம், தங்கம், வெள்ளி பறிமுதல்..!!
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi arrives at Prerna Sthal on the Parliament premises to pay a floral tribute to Mahatma Jyotiba Phule on his 200th birth anniversary today.
— ANI (@ANI) April 11, 2026
Lok Sabha Speaker Om Birla, Lok Sabha LoP Rahul Gandhi, Union Minister Arjun Ram Meghwal, former… pic.twitter.com/QexqUVky1Z
இந்த ஆண்டு அவரது 200வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தொடங்குவதால், இந்நாள் சிறப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. டெல்லி பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள ப்ரெர்னா ஸ்தலில் அமைக்கப்பட்டுள்ள ஜோதிபா புலேவின் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மலரஞ்சலி செலுத்திய பின்னர், பிரதமர் மோடியை ராகுல் காந்தி வரவேற்றார். இருவரும் சிரித்த முகத்துடன் கைகுலுக்கி, சில நிமிடங்கள் நட்புடன் உரையாடினர். இந்தக் காட்சி அரசியல் தலைவர்களிடையே உள்ள நல்லிணக்கத்தை பிரதிபலிப்பதாக பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி முர்மு உள்ளிட்டோர் அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டதும் கவனத்தை ஈர்த்தது.
மகாத்மா புலேவின் கொள்கைகள் – கல்வி, சமத்துவம், சமூக நீதி – இன்றைய இந்தியாவுக்கும் மிகவும் பொருத்தமானவை. அவரது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு அரசியல் எல்லைகளைத் தாண்டி, சமூக சீர்திருத்தவாதியின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: நடுக்கடலில் சட்டவிரோத நடவடிக்கை.. நாதக வேட்பாளரை வலை வீசி தேடும் மீன்வளத்துறை- நடந்தது என்ன?