மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!! கோவைக்கு வச்சாச்சு குறி!! ஏப்., 18 களைகட்ட போகுது!
ஏப்.,18ல் கோவையில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாஜகவினரின் தேர்தல் பணியை பாராட்டி பெருமிதம் தெரிவித்துள்ளார். தி.மு.க.வின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி, மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்கு பார்வையை மக்களிடம் எடுத்துரைத்த தமிழக பாஜகவினரை எண்ணி தான் மிகவும் பெருமைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 18ஆம் தேதி கோவையில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நேரில் பங்கேற்று பேச உள்ளார். இதற்கிடையில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நாளை (ஏப்ரல் 13) மாலை ஆன்லைன் வழியாக தமிழக பாஜக பொறுப்பாளர்களுடன் உரையாட உள்ளார்.
பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், “தி.மு.க.வின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி, மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வையை விரிவாக எடுத்துரைத்த நமது தமிழக பாஜகவினரை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இதையும் படிங்க: துவங்கியது 'பூத் சிலிப்' வழங்கும் பணி! பத்திக்கிச்சு தேர்தல் ஜுரம்!! விறுவிறு!
நாளை மாலை நடைபெறும் ‘எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி’ கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது, கடினமாக உழைக்கும் நமது தொண்டர்களுடன் நான் உரையாடவிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே பிரதமர் மோடி, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பாஜக பொறுப்பாளர்களுடன் இணைந்து வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து, மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்குமாறு தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில், நாளைய ஆன்லைன் உரையாடல் தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பாராட்டும், கோவை பொதுக்கூட்டப் பங்கேற்பும் பாஜகவுக்கு கூடுதல் வலு சேர்க்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநிலம் முழுவதும் பாஜக தொண்டர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் வேளையில், பிரதமரின் நேரடி உரையாடல் அவர்களது உழைப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது.
பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் நாள் நெருங்கும் சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வளர்ச்சித் திட்டங்கள் மக்களிடம் சென்றடையும் வகையில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் இடையே மத்தியஸ்தம் தொடரும்! பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து பாக்., அறிவிப்பு!