×
 

வேண்டாமே என கெஞ்சிய நிர்மலா சீதாராமன்!! கறார் காட்டி கண் சிவந்தார் மோடி! பிப்.,1-ல் நடந்தே தீரும்!

'மத்திய பட்ஜெட்டை 2ம் தேதியான, திங்கள் அல்லது ஜன., 31ம் தேதி சனிக்கிழமையன்று தாக்கல் செய்யலாம்' என, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமரிடம் கூறினாராம்.

மத்திய அரசின் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இது அண்மைக் காலங்களில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் அரிய நிகழ்வாகும்.

வழக்கமாக, 2017 முதல் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 அன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மாற்றத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்தது. முன்பு பிப்ரவரி கடைசி நாளில் (பொதுவாக 28-ஆம் தேதி) தாக்கல் செய்யப்பட்டு வந்தது. பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிந்து, ஏப்ரல் 1 முதல் புதிய நிதியாண்டு தொடங்கும் போது உடனடியாக அமலுக்கு வருவதற்காகவே இந்த மாற்றம் செய்யப்பட்டது.

இந்த ஆண்டு பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை என்பதால், அரசு அலுவலகங்கள், பங்குச்சந்தை உள்ளிட்டவை விடுமுறையில் இருக்கும். இதனால் பங்குச்சந்தை மற்றும் ரிசர்வ் வங்கியுடன் தொடர்புடைய பிரச்னைகள் ஏற்படலாம் என்று சில மூத்த அதிகாரிகள் கருதினர். 

இதையும் படிங்க: உலகின் சக்திவாய்ந்த பெண் நிர்மலா சீதாராமன்! அமெரிக்கா வெளியிட்ட லிஸ்டில் இந்தியர் 3 பேருக்கு இடம்!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், நிதி செயலராக பணியாற்றியவர் தற்போது கேபினட் செயலராக உள்ள டி.வி. சோமநாதனும் உள்ளிட்டோர் பிரதமரிடம் பேசி, ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக ஜனவரி 31 (சனிக்கிழமை) அல்லது பிப்ரவரி 2 (திங்கள்) அன்று தாக்கல் செய்யலாம் என்று பரிந்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இதற்கு உடன்படவில்லை. "நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 2017 முதல் பிப்ரவரி 1 அன்று தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பாரம்பரியத்தை தொடர வேண்டும்" என்று கறாராகக் கூறி விட்டார்.

 இதனால், ஞாயிற்றுக்கிழமையிலேயே பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவை "பிரதமர் மோடி நினைத்ததைச் செய்பவர்" என்று பாஜகவினர் பாராட்டி வருகின்றனர்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம் தொடர்ச்சியாக 9-ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் என்ற சாதனையை படைப்பார். 

பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 28 அன்று தொடங்கி, ஏப்ரல் 2 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஞாயிறு பட்ஜெட், நாட்டின் பொருளாதார வரலாற்றில் ஒரு மறக்க முடியாத நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 1100 பள்ளிகளில் தலைமையாசிரியர் இல்லை... அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு பள்ளிக் கல்வித்துறை விளக்கம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share