×
 

மோடியின் வெற்றுக் கூச்சல்... தீவிரவாதத்துக்கு எதிராக வேஷம்... திமுக அதிரடி அட்டாக்..!

காஷ்­மீ­ரத்தை பாது­காக்­க­வில்லை. அது அவர்­க­ளது நோக்­க­மா­க­வும் இல்லை. அத­னால்­தான் பிர­த­மர் பேச்சு வேஷ­மா­கவே இருக்­கி­றது

“காஷ்­மீ­ரில் நடை­பெற்ற பயங்­க­ர­வா­தச் செய­லுக்­குக் கார­ண­மான தீவி­ர­வா­தி­களை                                  வேட்­டை­யா­டு­வோம். இந்­தி­யா­வின் பதி­லடி என்­பது கற்­ப­னைக்கு எட்­டாத அள­வுக்கு இருக்­கும்” என்று‘ஆவே­சம்’காட்டி இருக்­கி­றார் பிர­த­மர் நரேந்­திர மோடி. இதுஉண்­மை­யில் ஆவே­ச­மல்ல,              வேஷம்­தான் என்­பது அவ­ரது செயல் மூலம் தெரி­கி­றது'' என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது.

ஆவேசமா? வேஷமா? என்கிற தலைப்பில் வெளியாகி உள்ள கட்டுரையில், ''ஜம்மு – காஷ்­மீர் மாநி­லம், பஹல்­காம் மாவட்­டம், பைச­ரன் பள்­ளத்­தாக்­கில் பயங்­கர தீவி­ர­வா­தி­கள் கடந்த 22 ஆம் தேதி நடத்­திய தாக்­கு­த­லில் 26 உயிர்­கள் கொல்­லப்­பட்­டன. இரு­ப­துக்­கும் மேற்­பட்­டோர் காயம் அடைந்­தார்­கள். இந்த இரக்­க­மற்ற கொடூ­ர­மான பயங்­க­ர­வா­தச் செயல் கடும் கண்­ட­னத்­துக்கு உரி­யது. இதற்­குக் கார­ண­மான பயங்­க­ரத் தீவி­ர­வா­தி­க­ளைக் கைது செய்து தண்­டிக்­கும் கடமை ஒன்­றிய பா.ஜ.க. அர­சுக்கு உள்­ளது.

இந்­தக் கொடூர சம்­ப­வம் நடக்­கும் போது வெளி­நாட்­டில் இருந்­தார் பிர­த­மர் மோடி. உட­ன­டி­யாக நாடு திரும்­பி­னார். ஆனால் சம்­ப­வம் நடந்தபஹல்­காம் மாவட்­டம் செல்­ல­வில்லை. காய­ம­டைந்த மக்­களை மருத்­து­வ­ ம­னைக்­குச் சென்று பார்க்கவில்லை. உயி­ரி­ழந்­தோர் உட­லுக்கு அஞ்­சலிசெலுத்­த­வில்லை. அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்தை ஒன்­றிய அரசு நடத்­தி­யது.அதி­லும் கலந்து கொள்­ள­வில்லை.                   உட­ன­டி­யாக நாடு திரும்­பிய அவர், பீகா­ரில் நடை­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் கலந்து கொண்­டார். பயங்­க­ர­வா­தச்செய­லைக் கண்­டித்து பீகார் தேர்­தல் பொதுக்­கூட்­டத்­தில் பேசி­னார்           பிர­த­மர். என­வே­தான் அவ­ரது பேச்சு ஆவே­ச­மல்ல, வேஷம்­தான் என்று சொல்ல வேண்­டி­ய­தாக உள்­ளது.

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு அடுத்த ஆப்பு... மருந்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு!!

2024 ஆம் ஆண்டு செப்­டம்­பர் 14 ஆம் தேதி காஷ்­மீ­ரில் சட்­ட­ மன்­றத் தேர்­தல் பொதுக்­கூட்­டத்­தில் உரை­யாற்­றிய மோடி, “ஜம்மு – காஷ்­மீ­ரில் பயங்­க­ர­வா­தம் இறுதி மூச்சு விட்­டுக் கொண்­டி­ருக்­கி­றது” என்­றார். ஜம்மு – காஷ்­மீ­ரில் பயங்­க­ர­வா­தம் இறு­தி­மூச்சை விட­வில்லை. மக்­கள்­தான் இறுதி மூச்சை விட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

கிஷ்த்­வார் என்ற தொகு­தி­யில் பா.ஜ.க. சார்­பில் ஷாகுன் பரி­ஹார் என்­ப­வர்வேட்­பா­ள­ராக அப்­போது நிறுத்­தப்­பட்டு இருந்­தார். பல ஆண்­டு­க­ளுக்கு முன்பு நடந்த ஒரு வன்­மு­றை­யில் தனது தந்தை மற்­றும் உற­வி­னர்­களை இழந்­த­வர் அவர். “கிஷ்த்­வா­ரில் ஷாகுன் பரி­ஹாரை வேட்­பா­ள­ராக நாங்­கள்               அறி­வித்­துள்­ளோம். இது ஜம்மு - – காஷ்­மீ­ரில் பயங்­க­ர­வா­தத்­தைத் துடைத்­தெ­றி­யும் பா.ஜ.க.வின்          உறு­திப்­பாட்டை பிர­தி­ப­லிக்­கி­றது. பயங்­க­ர­வா­தத்­தில் இருந்து ஜம்மு - காஷ்­மீரை முழு­மை­யாக          விடு­வித்து, அதை சுற்­றுலா பய­ணி­க­ளின் சொர்க்­க­மா­க­வும், சர்­வ­தேச திரைப்­பட படப்­பி­டிப்­புத்          தள­மா­க­வும் மாற்­று­வதே எங்­க­ளின் நோக்­கம்” என்­றும் பேசி­னார் பிர­த­மர் மோடி.இப்­போது துப்­பாக்­கிப் பயங்­க­ரம் வெடித்த இடம் சுற்­றுலா தலம்.கொல்­லப்­பட்­ட­வர்­கள் சுற்­றுலா பய­ணி­கள். அப்­ப­டி­யா­னால் ஜம்மு – காஷ்­மீரைபயங்­க­ர­வா­தத்­தில் இருந்து விடு­வித்­து­விட்­டோம் என்று மார்­தட்­டி­யது எப்­படி           உண்­மை­யா­கும்? அது வேஷம் அல்­லவா?

தீவி­ர­வா­தி­க­ளுக்கு அடைக்­க­லம் கொடுத்த பாகிஸ்­தான் மீது ஒன்­றிய பா.ஜ.க. அரசு நட­வ­டிக்கை    எடுக்­கி­றது. இரு­நா­டு­க­ளுக்­கும் இடை­யி­லான சிந்து நதி நீர் ஒப்­பந்­தத்தை நிறுத்தி வைத்­துள்­ளது. பாகிஸ்­தா­னி­யர்­க­ளுக்கு விசா வழங்­கு­வது நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தி­யா­வில் உள்ள       பாகிஸ்­தா­னி­யர்­களை உட­ன­டி­யாக வெளி­யேற்­றச் சொல்லி இருக்­கி­றது. அட்­டாரி - வாகா எல்லை மூடப்­பட்­டுள்­ளது. பாகிஸ்­தான் தூத­ரக அதி­கா­ரி­ க­ளின் எண்­ணிக்கை குறைக்­கப்­பட்­டுள்­ ளது.      பாகிஸ்­தான் தூதர் அழைக்­கப்­பட்டு கண்­டிக்­கப்­பட்­டுள்­ளார். இவை அனைத்­தும் பயங்­க­ர­வாத சம்­ப­வம் நடந்த பிறகு நடத்­தப்­பட்­டவை.ஆனால் ‘சவு­கி­தார்’ ஆட்­சி­யில் இந்த சம்­ப­வம் எப்­படி நடந்­தது?

பா.ஜ.க. ஆட்­சி­யில் இது முதல் சம்­ப­வம் அல்ல. ‘கோழை இந்­திய பிர­த­ம­ராக இருப்­ப­தால்­தான் அண்டை நாடு­கள் ஆட்­டம் போடு­கி­றது’ என்று பிர­த­ம­ராக மன்­மோ­கன் சிங் இருந்த போது நரேந்­திர மோடி சொன்­னார். அவ­ரது ஆட்­சி­யில் என்ன நடந்­தது?

*2016 சன­வரி 2 - பதான்­கோட் தாக்­கு­த­லில் 7 வீரர்­கள் பலி.

*2016 பிப்­ர­வரி - பொம்­பொ­ரி­யில் எட்டு ராணுவ வீரர்­கள் பலி.

*2016 செப்­டம்­ப­ரில் - உரி தாக்­கு­த­லில் 19 படை­வீ­ரர்­கள் பலி.

*2017 போபால் உஜ்­ஜைனி தொடர் வண்­டி­யில் நடத்­தப்­பட்ட வெடி­குண்டு தாக்­கு­த­லில் எட்­டுப் பேர் காயம்.

*2017 - அமர்­நாத் கோவில் தாக்­கு­த­லில் ஏழு பேர் பலி.

*2017 லெத்­தி­போரா கமாண்டோ பயிற்சி நிலைய தாக்­கு­த­லில் 5 பாது­காப்பு வீரர்­கள் பலி.

*2019 பிப்­ர­வரி 14 - புல்­வாமா தாக்­கு­த­லில் 40 படை­வீ­ரர்­கள் பலி.

*2022 ஆகஸ்ட் 11 - இர­ஜோரி ராணுவ முகாம் தாக்­கு­த­லில் 3 ராணுவ வீரர்­கள் பலி.

*2024 மே 4 ஆம் தேதி ஜம்மு காஷ்­மீர் பஞ்ச் பகு­தி­யில் பயங்­க­ர­வா­தி ­க­ளுக்­கும் பாது­காப்பு                     படை­யி­ன­ருக்­கும் சண்டை ஏற்­பட்­டது.

 அதே ஆண்டு மே 19 ஷோபி­யான் பகு­தி­யில் நடந்த தாக்­கு­த­லில் 2 பேர் பலி. இவை எல்­லாம்                 நாளி­தழ்­க­ளில் வந்த செய்­தி­கள்தான். நாளே­டு­க­ளில் வராத செய்­தி­கள் எவ்­வ­ளவோ? 2019 பிப்­ர­வரி 14 அன்று சி.ஆர்.பி.எஃப். படை­யி­னர் மீது தாக்­கு­தல்நடத்­தப்­பட்டு 40 பேர் பலி­யான ‘புல்­வாமா தாக்­கு­தல்’ குறித்து, அப்­போ­தைய ஜம்மு - – காஷ்­மீர் ஆளு­நர் சத்ய பால் மாலிக் என்ன சொன்­னார்? “ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் அலட்­சி­யம்­தான் இந்த தாக்­கு­த­லுக்­குக் கார­ணம்” என்று சொன்­னார்.

இப்­போது பைச­ரன் பள்­ளத்­தாக்­கில் ஒரு காவ­லர் இல்லை, ஒரு ராணுவ வீரர் இல்லை. இது­தான்         காஷ்­மீ­ரத்­துக்கு கொடுத்த பாது­காப்பா?370 சிறப்­புப் பிரிவை நீக்­கி­னால் காஷ்­மீர் அமை­தி­யாகி விடும். காஷ்­மீர்மாநி­லத்தைப் பிரித்­தால் அது அமை­தி­யா­கி­வி­டும். சட்­ட­மன்­றத் தேர்­தல் நடத்­தா­ விட்­டால் அமை­தி­யாகி விடும். உள்­ளூர் அர­சி­யல் தலை­வர்­களை வீட்­டுக் காவ­லில் வைத்­தால் அமை­தி­யா­கி­      வி­டும் பூம­ராங் காட்டி வந்­தார்­களே தவிர, காஷ்­மீ­ரத்தை பாது­காக்­க­வில்லை. அது அவர்­க­ளது            நோக்­க­மா­க­வும் இல்லை. அத­னால்­தான் பிர­த­மர் பேச்சு வேஷ­மா­கவே இருக்­கி­றது'' எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கதை முடிஞ்சது..! புதுசா 2 அணைகளுக்கு பிளான் ரெடி..! பாலைவனம் ஆகும் பாகிஸ்தான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share