×
 

பாஜக நிர்வாகிகளுக்கு மோடி சீக்ரெட் அசைன்மெண்ட்!! திமுக வாக்குகளை அறுவடை செய்ய ஸ்கெட்ச்!

தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிரான அலை கடுமையாக வீசுகிறது. இதை தேஜ கூட்டணி மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மோடி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழகம் வந்தபோது மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து பாஜக மாநில தலைமை, மூத்த நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் மூடிய அறை ஆலோசனை கூட்டம் நடத்தினார். அங்கு தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிரான அலை கடுமையாக வீசுவதாகவும், அதை தேஜ கூட்டணி (தேசிய ஜனநாயகக் கூட்டணி) முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மோடி கூறியதாவது: "திமுகவுக்கு எதிரான மனநிலை உள்ளவர்களின் ஓட்டுகளை 100 சதவீதம் சிந்தாமல், சிதறாமல் நம்மிடம் கொண்டு வர வேண்டும். இதற்கு பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் பூத் கமிட்டி அளவில் களப்பணியை தீவிரப்படுத்த வேண்டும்." மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் - ஆயுஷ்மான் பாரத், பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி, உஜ்வாலா, PM Awas Yojana போன்றவை - மக்களுக்கு எப்படி பயனளித்துள்ளன என்பதை வீடு வீடாக சென்று எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார்.

மேலும், "மக்களின் சிறு சிறு தேவைகளை கேட்டறிந்து, அதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண உதவுங்கள். திமுக அரசின் ஊழல், அராஜகம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு போன்ற எதிர்மறை செயல்பாடுகளை ஒவ்வொரு வாக்காளரும் அறியும் வகையில் தொடர்ந்து பேசுங்கள்" என்று அறிவுரை வழங்கினார்.

இதையும் படிங்க: தேஜ கூட்டணியில் இணைகிறதா தேமுதிக?!! இபிஎஸ் வீட்டில் நடந்த மீட்டிங்! பாஜக போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்!

பாஜக தொண்டர்கள் மக்களோடு மக்களாக பழகி, நம்பிக்கை பெற வேண்டும். வெறும் ஓட்டு கேட்பது மட்டும் போதாது; சிறு உதவிகளை செய்து தர வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகள் தங்கள் பகுதியில் ஒவ்வொரு வீட்டையும் தொடர்பு கொள்ள வேண்டும். இப்படி செய்தால் திமுக எதிர்ப்பு ஓட்டுகள் முழுமையாக பாஜக கூட்டணிக்கு விழும் என்று மோடி தெளிவுபடுத்தினார்.

கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மூத்த நிர்வாகிகள் கூறுகையில், "பிரதமர் தமிழக அரசியல் கள நிலவரத்தை மிகத் தெளிவாக புரிந்து கொண்டார். எங்கள் கருத்துக்களை கேட்டறிந்தார். அவரின் டிப்ஸ்களை பயன்படுத்தி பூத் கமிட்டி அளவில் கட்சியை பலப்படுத்துவோம். வீடு வீடாக சென்று மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து, திமுகவுக்கு எதிரான மனநிலையை தேஜ கூட்டணி ஆட்சிக்கு மாற்றுவோம்" என்றனர்.

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தேஜ கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு பாஜக முழு மூச்சுடன் ஈடுபடும் என அவர்கள் உறுதியளித்தனர். மோடியின் இந்த ஆலோசனை தமிழக பாஜகவினருக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. திமுக எதிர்ப்பு அலை எப்படி முழுமையாக பயன்படுத்தப்படும் என்பதை இப்போதே களத்தில் காட்ட தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.

இதையும் படிங்க: அடுத்தடுத்து தமிழகம் விசிட்! பக்கா ப்ளானில் பிரதமர் மோடி!! மார்ச் -1ல் மதுரை! அடுத்தது வேலூர்! களைகட்டும் தேர்தல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share