கூட்டணிக்குள் குண்டு வைத்த முத்தரசன்... உதயநிதிக்கு ஆதரவாக சுடச்சுட சி.எம்.விஜய்க்கு பதிலடி...!
நாங்கள் பேப்பர் படிக்காதவர்கள் தான்,ஆனால் வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை. முதல்வரின் கருத்தை நான் மறுக்கிறேன்
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணத்தையும் தவெக அரசு தரவில்லை என தயநிதி தெரிவித்தார். இதற்கு “குறுவை சாகுபடிக்கான நிவாரணம் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் கேட்டு இருந்தார். இதற்கான நிவாரணம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டடுள்ளது. அரசியலே நாங்கள் தான் என சொல்லிக் கொள்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை. முன்ன பின்ன பேப்பர் படித்து இருந்தால் நாட்டில் என்ன நடக்கிறது என தெரிந்து இருக்கும்” என விஜய் பதிலடி கொடுத்தார்.
இதற்கு தவெகவிற்கு ஆதரவு அளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் முத்தரசன் கொடுத்த பதில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: வீடியோ கான்பரன்சில் ஆஜரான சங்கீதா! நீதிபதி விசாரணை!
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடு தழுவிய நடைபயண பிரச்சாரத்தை கட்சியின் முன்னாள் மாநில தலைவர் முத்தரசன் என்று தொடங்கி வைத்தார்.முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் கூறுகையில், மேகதாது அணி விவகாரத்தில் அனைத்து கட்சியையும் கூட்டி தமிழக முதல்வர் கர்நாடக அரசுக்கும் மத்திய அரசுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும், தமிழகத்தை வடிகாலாக கர்நாடக பயன்படுத்த நினைக்கிறது, மேகதாது அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாக மாறும்,
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அது குறித்து அறிவிப்புகள் எல்லாம் முடிந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
காவிரியில் தண்ணீர் வராததால் விவசாயிகள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்,அதைத்தான் நாங்கள் கூறி வருகிறோம்.செப்டம்பர் மாதம் வறட்சி நிவாரணம் கொடுக்கிறோம் என்பதை விட பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வரட்சி நிவாரணத்தை கொடுக்க வேண்டும்.
குருவை சாகுபடி செய்யாத வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை.
முதல்வர் வழங்கி விட்டதாக பேரவையில் கூறினால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்,
முதல்வரின் இந்த கருத்தை நான் மறுக்கிறேன்.தமிழக அரசு ஏற்கனவே வழங்கியது எல்லா காலகட்டத்திலும் எல்லா அரசும் வழங்கும் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்.நாங்கள் எல்லாம் பேப்பர் படிக்காதவர்கள் தான்,பிறர் சொல்வதை கேட்டுக் கொண்டுதான் பேசுகிறோம்,அதனால் சில விஷயங்கள் எங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்ஆனால் வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என்பது மட்டும் எங்களுக்கு தெரியும் என்ற முத்தரசன் கூறினார்.
இதையும் படிங்க: சட்டசபையில் முதல்வர் விஜய் - உதயநிதி பனிப்போர்? முகம் பார்க்காமல்... வணக்கம் வைக்காமல் தவிர்ப்பு