ஒரே நாளில் 3 பாலியல் குற்றங்கள்... ஈரக்குலை நடுங்குது..! கொதித்துப் போன நயினார்..!!
ஒரே நாளில் மூன்று பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் நடந்திருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடைபெறும் காலகட்டத்தில், குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள், அரசியல் தலைவர்கள் சார்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விமர்சனங்கள் முக்கியமாக சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, குற்றச் செயல்கள் அதிகரிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர்களான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் உள்ளிட்டோர் இதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர்.
"சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை", "குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஆட்சி", "பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன" என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக, பள்ளிகள், கல்லூரிகள், வீடுகள், பொது இடங்கள் என எங்கும் பாதுகாப்பு பறிபோய்விட்டதாகவும், குற்றவாளிகளுக்கு ஆதரவு தரும் சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறுகின்றனர். பச்சிளம் குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வரும் தகவல்கள் இந்த விமர்சனங்களை தீவிரப்படுத்துகின்றன.
இந்த நிலையில், சென்னையில் ஒரே நாளில் மூன்று பாலியல் குற்றங்கள் நடைபெற்று இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார். விடிந்தால் ஒரு பாலியல் வன்கொடுமை செய்தி வரும் விடியா திமுக ஆட்சியில், இன்று காலையிலேயே சென்னையில் மட்டும் 14 வயது பள்ளி மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை, ப்ராஜெக்ட் தொடர்பாக சென்னை வந்த கல்லூரி மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை, தையல் கடையில் 19 வயது பெண்ணுக்குப் பாலியல் தொல்லை என மூன்று சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தூக்குல போடுங்க... பெண் பிள்ளைகளை சீரழிக்கும் அவலம்... சீமான் ஆவேசம்..!!
இந்த கருத்தை தெரிவிக்கும் போதே தமிழகத்தின் எந்த மூலையில், எந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகிறாரோ என யோசிக்கையில் ஈரக்குலை நடுங்குகிறது என்றார். தொடர்ந்து ஒரு வார காலமாக நடக்கும் கொடூரங்களே, கேடுகெட்ட திமுக ஆட்சியின் திறனற்ற நிர்வாகத்திற்கு சாட்சி என்றும் தமிழகத்தைப் பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாற்றிய திமுகவைத் துரத்தியடிப்போம் எனவும் தமிழக மகளிரைக் காப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈரானுக்கு கலங்கிய திருமா., ட்ரம்புக்கு லெட்டர் போட்ட கமல் எங்கப்பா போனீங்க? விளாசிய வினோஜ் பி. செல்வம்..!!