×
 

பாஜகவினர் நிழல் பட்டாலே கைவிலங்குடன் துரத்தும் திமுக...!! நயினார் கண்டனம்..!!

பாஜக தொண்டர்கள் நிழல் பட்டாலே கைவிலங்குடன் திமுக அரசு துரத்துவதாக நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜகவினரின் நியாயமான போராட்டத்திற்கு அனுமதி கொடுத்த காவல் துறை பிறகு கைது செய்ய துடிப்பது ஏன் என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். பாஜகவினர் மீது தொடர்ந்து அடக்குமுறையை ஏவும் பாசிச மாடல் அரசு ஒழிய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் ராஜேந்திரன் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பிரதமர் மோடியின் உருவப்படத்தையும், பசியற்ற பாரதத்தை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட “அன்னயோஜனா” திட்டம் குறித்த தகவல் பலகையையும் வைக்கக் கோரி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கோவை மாநகர் பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நிர்வாகிகளை திமுக அரசு வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.

இப்போராட்டத்திற்கு முறைப்படி விண்ணப்பித்து, அதிகாரிகளிடம் அனுமதி வாங்கியதாக கூறப்படும் நிலையில், மாலையில் சரியென்று தலையை ஆட்டிய காவல்துறை காலையில் ஓடிவந்து பாஜகவினரை கைது செய்து சிறையில் தள்ள முயற்சிப்பதன் பின்னணி என்ன என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதே கோவையில் ஏழை மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை தனது சொந்த வீடாகவே மாற்றி வசித்து வரும் திமுக நிர்வாகியை கண்காணிக்காமல் காவல்துறை கோட்டை விட்டதாக குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: விஜய் துணை முதல்வரா? NDA கூட்டணியில் அதிரடி திருப்பமா? நயினார் பளீச் பதில்..!!

பாஜக தொண்டர்களின் நிழல் நிலத்தில் பட்டாலே கைவிலங்குடன் துரத்துவது ஏன் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். பாஜகவினரின் போராட்ட முகம் முதல்வர் ஸ்டாலினையும் அவரது கட்டுப்பாட்டில் கைகட்டி நிற்கும் காவல்துறையையும் அந்தளவிற்கு பயமுறுத்துகிறதா என்று சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக "குண்டர்கள்" அட்டூழியம்... ஒரே நேரத்தில் 2 உயிரை காவு வாங்கிய உ. பி. க்கள்... நயினார் கொந்தளிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share