பேராசிரியர்கள் இன்றி அள்ளாடும் பல்கலைக்கழகங்கள்...! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!!
பல்கலைக்கழகங்கள் தொடர்பான முக்கிய வலியுறுத்தலை முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் முன் வைத்தார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும் தமிழக வெற்றி கழகம் சில முக்கிய துறைகளை அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு வழங்கி இருக்கிறது. இந்த நிலையில் பல்கலைக்கழகங்களை சுட்டிக்காட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு முன் வைத்துள்ளார்.
பேராசிரியர்களின்றி அல்லாடும் பல்கலைக்கழகங்களை தவெக அரசு காப்பாற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். புதிய கல்வியாண்டு தொடங்கவிருக்கும் வேளையில், தமிழகத்திலுள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் 50% அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று கூறினார்.
ஐந்தாண்டுகாலமாக பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் முந்தைய திமுக அரசு மெத்தனமாக செயல்பட்டதால், இன்று, பழம்பெருமை மிக்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 96% பேராசிரியர் பணியிடங்களும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 92.9% பேராசிரியர் பணியிடங்களும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 74.4% துணைப் பேராசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இப்படி பேராசிரியர்களே இல்லாமல், மாணவர்களின் கல்வியைச் சிதைத்து, ஆராய்ச்சித் திறனைப் பறித்து, வேலைவாய்ப்புகளைக் குறைத்து, தமிழகத்தின் எதிர்காலத்தையே சீரழித்ததால்தான் திமுக அரசு தமிழக மக்களால் துரத்தியடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பட்டதாரிகள் எதிர்காலத்தோட விளையாடாதீங்க... நியமனத்தை விரைவுபடுத்துங்க..! நயினார் வலியுறுத்தல்..!!
இந்நிலையில், தங்களது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வசம் உயர்கல்வித்துறை இருப்பதால் முதல்வர் விஜய், பேராசிரியர்களின்றி அல்லாடும் பல்கலைக்கழகங்களை கண்டுகொள்ளாமல் விடக்கூடாது என்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் விஜய் நேரடியாகத் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: "ரீல்ஸ் மட்டும் போதாது... உண்மையான சீரமைப்பு தேவை...!” நயினார் நாகேந்திரன் கருத்து..!