“இபிஎஸ் தான் முதல்வர் ஆனா...” - NDA கூட்டணிக்குள் குண்டு வைத்த நயினார்... அமைச்சரவைக்கு காத்திருக்கும் ஆப்பு...!
முதலில் கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் வெற்றி பெறட்டும் அதன் பிறகு அடுத்து பேசட்டும் நயினார் நாகேந்திரன் விமர்சனம்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரும்பான்மையாக யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தான் அமைச்சரவையை அமைப்பார்கள் என பாஜக மாநில தலைவர் நயினார் கூட்டணி ஆட்சி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக முதலமைச்சர் கூட்டணி ஆட்சி ஒத்து வராது என்று கூறியது அவர்கள் கூட்டணிக்காக கூறி இருக்கிறார்கள்.ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதால் அவர்கள் அப்படி கூறியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: தாறுமாறாக லத்தியால் தாக்கிய போலீஸ்..! துருப்பிடித்த ஸ்டாலின் கரம்... தவிப்பது மக்கள்தானே? அதிமுக விளாசல்..!
நாங்கள் கட்டாயமாக சொல்கிறோம் 200 இடங்களில் வெற்றி பெறுவோம். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா. அல்லது விஜய் கூட்டணிக்கு செல்வார்களா.
திமுக ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்றுவரை ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை அவர்கள் விட்டதே இல்லை.ஜேபி நட்டா மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தபோது எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது பேச்சுவார்த்தை நடத்தி அரசு பள்ளி மாணவர்கள் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்று தந்தார்கள்.அடுத்த முதலமைச்சர் ஆக போவது இபிஎஸ்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறுகிறீர்களே கூட்டணி ஆட்சி தான் பாஜகவின் நிலைப்பாடா? என்ற கேள்விக்கு, திரும்பத் திரும்ப இதே கேள்வியை கேட்கிறீர்கள். பெரும்பான்மையாக யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தான் அமைச்சரவையை அமைப்பார்கள். இபிஎஸ் தான் முதலமைச்சர்.
நானும் கருத்துக்கணிப்பை எடுத்து இருக்கிறேன். நெல்லையில் கூடுதலாக 20 சதவீதம் எங்களுக்கு ஆதரவு இருக்கிறது. தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை எந்த அளவிற்கு இருக்கிறது என்ற கேள்விக்கு, நடந்து முடிந்தவுடன் நானே தெரிவிக்கிறேன்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த டிமாண்டும் எங்களுக்கு கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணி எங்களுக்கு வெற்றி பெற வேண்டும். தேமுதிகவுடன் இதுவரை பேச்சுவார்த்தை நடக்கவில்லை.சுதிஸ் நீண்ட நாள் நண்பர். கூட்டணி குறித்த நான் இதுவரை பேசவில்லை. பிரதமர் வருகின்ற பொழுது கூட்டணியை மேடையில் பார்க்கலாம்.
நடிகர் விஜயை செங்கோட்டையன் கட்டாயமாக முதலமைச்சராக்குவேன் என்று கூறுகிறாரே உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு, முதலில் கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் ஜெயிக்கட்டும் அதன் பிறகு அடுத்தது பேசட்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: அட விடுங்கப்பா.! விஜயை எந்த நாட்டுக்கு முதல்வர் ஆக்கப் போறாரு செங்கோட்டையன்? செல்லூர் ராஜு கேள்வி..!