×
 

சம்பவம் லோடிங்...!! - இன்று மாலை அதிரப்போகும் தமிழக அரசியல் களம்... நயினார் அதிரடி அறிவிப்பு...!

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு எப்போது? என  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். 

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் எனத் தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். மற்ற கட்சிகளுக்கு முன்னதாக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து சீமான் தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளார்.

மற்றொருபுறம் தமிழ்நாட்டின் பிரதான கட்சியான திமுகவும், அதிமுகவும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. குறிப்பாக திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் கை நழுவக்கூடிய சூழ்நிலையில் உள்ளது. மறுபுறம் தொகுதி பங்கீட்டின் போது அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாஜக எந்தெந்த பிரச்சனைகளை கொடுக்கும் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. 

இதனிடையே நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்று மாலை 6:00 மணிக்கு தமிழக எங்கும் வாழும் முருக பக்தர்கள் அனைவரும் தங்களது வீடுகளிலும் வீதிகளிலும் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளேன். திருப்பரங்குன்றம் மலையின் மீது தீபம் ஏற்ற இறைவன் அருள வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளோம்.  2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் எனவும் வேண்டிக்கொள்கிறோம். 

இதையும் படிங்க: மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என சொன்ன ஓ.பி.எஸ்..! ஒரே வரியில் பதிலடி கொடுத்த நயினார் ..!

ஏற்கனவே திமுக கூட்டணியில் இருப்பவர்கள் தான் தற்பொழுதும் இருக்கிறார்கள் கூடுதலாக ஒருவர் சேர்ந்து இருக்கிறார். அதை மின்னல் வேகம் என்று சொல்ல. மக்கள்தான் முடிவேடுப்பார்கள். பிரதமருக்கு எதிராக தென்காசியில் திமுக பிரமுகர் ஒருவர் பேசியிருக்கிறார் அவரை இன்னும் கைது செய்யவில்லை. 

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்பொழுது தொடங்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, அனைவரையும் அழைத்து தெரிவிப்போம். டிடிவி தினகரன் நாங்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிடம் தான் பேசுவோம் என்று கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, அவரும் எங்களுடன் தான் இருக்கிறார். அதில் ஒன்றுமில்லை. 2026 வளமான மாற்றத்தை தமிழக மக்கள் பார்ப்பார்கள் என்று கூறினார்.

இதையும் படிங்க: ஊழல் கோட்டை திமுக... அழிவு காலம் வந்துடுச்சு... கொந்தளித்த நயினார்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share