×
 

அமித்ஷாவுடன் பேசியது என்ன? இதுதான் நடந்துச்சு... நயினார் ஓபன் டாக்...!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என அதிமுகவும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று திமுகவும் தீவிரமாக களமாடி வருகின்றன. என்னதான் செல்வாக்கு நிறைந்த கட்சியாக இருந்தாலும் பாஜகவால் தமிழகத்தில் உறுதியாக காலூன்ற முடியாத சூழல் ஏற்பட்டது.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக 2026 சட்டமன்றத் தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசியல் களம் என்பது பாஜகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துவிட்டது.

இதற்கிடையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி உள்ளிட்டகை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியுடன் அவர் ஆலோசித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று முன்தினம் அவர் சந்தித்து இருந்தார். இந்த நிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நயினார் சந்தித்தார். அமித் ஷா உடனான சந்திப்பு குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மரியாதை நிமித்தமாக தான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... தமிழ்நாட்டுக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...!

அவரிடம் கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றும் கூறினார். எடப்பாடி பழனிச்சாமியிடம் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியது குறித்து அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் குறை இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் கூட்டணி உள்ளிட்டவை தொடர்பாக பேசவில்லை என்றும் மரியாதை நிமித்தமாக தான் அமித் ஷாவை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி மாதம் அமித் ஷா வருகை தர இருப்பதாக நயினார் நாகேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: "அமித் ஷாவைச் சந்திக்க மாட்டேன்!"  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணையாது: டிடிவி தினகரன் திட்டவட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share