×
 

"முதல்ல இட்லி தோசையை சாப்பிடுங்க... அப்புறம் சப்பாத்திக்கு போகலாம்..." - செய்தியாளரிடம் டென்ஷன் ஆன நயினார் நாகேந்திரன் ...!

குஜராத்தில் கஞ்சா அதிக அளவில் பிடிபட்டுள்ளதே?  என்ற கேள்விக்கு, இட்லி தோசையை முதலில் சாப்பிடுங்க இரண்டாவது சப்பாத்தி சாப்பிடுங்க என்று ஆத்திரத்துடன் பதிலளித்தார்.

பா.ஜ.க.மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மக்களுடைய வரவேற்பை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றிருப்பது பல்வேறு இடங்களில் பார்க்க முடிந்தது. பீகாரில் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு மக்கள் 200 இடங்களை வெற்றி பெற வைத்திருக்கிறார்களோ அதே மாதிரி தமிழகத்திலும் 2026-ல் பெருவாரியான இடங்களை பெறும்.

எஸ்ஐஆர்க்கு எதிராக சில அதிகாரிகளே செயல்படுறாங்க அப்படின்னு இபிஎஸ் குற்றச்சாட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு, எஸ்ஐஆருக்கு எதிராக கன்னியாகுமரியில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியே கலந்து கொள்ளவில்லை. வாக்கு வேணும், வேண்டாங்கிறத தீர்மானிக்கிறது நம்மதான். மத்திய அரசாங்கம்தான். 

நம்ம மத்திய அரசாங்கம் மட்டுமில்ல இதே மாதிரி எஸ்.ஐ.ஆர் தீவிர திருத்தம் ஏற்கனவே செய்துள்ளனர்.  எதை செய்தாலும் மாநில முதலமைச்சர் எதிர்த்து கொண்டே இருக்கிறார். குடியுரிமை சட்டத்தை கொண்டு வரும்போதும் இதே மாதிரி எதிர்ப்பு தெரிவித்தார். எஸ்.ஐ.ஆர்க்கும் நீதிமன்றம் சென்றனர். இதை நிறுத்த முடியாது என நீதிமன்றம் சொல்லிவிட்டது. 

இதையும் படிங்க: "Wait and see" - அதிமுக+பாஜக கூட்டணியில் இணையப் போகும் முக்கிய கட்சி... ஹின்ட் கொடுத்த நயினார் நாகேந்திரன்...!

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டி வருகின்றனர் இதனை முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை.இதற்காக நீதிமன்றம் செல்ல அவர் தயாராக இல்லை. 

எஸ்ஐஆருக்கு எதிராக த.வெ.க ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனரே என்ற கேள்விக்கு?, அவரவர் மனநிலையை பொறுத்தது. மக்களுக்கு தேவையான விஷயங்கள் நாட்டிற்கு தேவையான விஷயங்களை சொல்றதுதான் நல்ல தலைவர்களுக்கு அழகு. எஸ்ஆர்ஐ ஒரு பெரிய விஷயமா எல்லாரும் கேட்டுக்கிட்டே இருக்கறீங்க. இதுல என்ன இருக்கு இறந்தவர்கள் வாக்கை நீக்க வேண்டும். வெளியூருக்கு போனவங்களை நீக்க வேண்டும் . புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும் ‌இதுதான் SIR,அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த சாரை விட மோசமான சாரா இது? அந்த சார் இப்ப உள்ள இருக்காரு இன்னொரு சார் வெளிய இருக்காரு. தேர்தல் முடிஞ்சா அந்த சாரும் உள்ள போயிருவாரு என்றார்.

SIR இதுக்கு முன்னாடி பண்ணிருக்காங்கன்னு சொல்றீங்க இதற்கு முன்னாடி பீகாரில் நீக்கியது போல் 60 லட்சம் பேரை நீக்கவில்லையே ?அத்தனை பேரும்.போலிவாக்காளரா? இறந்து போனவங்களா? என்ற கேள்விக்கு, மேற்கு வங்காளத்துல இருந்து ஊடுருவி திருப்பூர் வரைக்கும் வராங்க. கடைசில விசாரிச்சு பார்த்தாங்க தீவிரவாதியா இருக்காங்க. இதனாலதான் நம்ம ஒரு கட்டுப்பாடு கொண்டு வரணும். பீகார்ல பார்த்தீங்கன்னா 62 லட்சம் பேர் 30 லட்சம் பேர் இறந்து விட்டனர்.கொளத்தூர் தொகுதியில நம்முடைய முதலமைச்சர் தொகுதியில 9,000 வாக்கு அதிகமாக உள்ளது.

 பொதுக்கூடத்தில பேசும்போது மாநில அரசு மத்திய அரசோட ஒத்து போனாதான் நிதிகள் கிடைக்கும் என்று பேசினீர்கள்? தமிழ்நாடு அரசு மோதல் போக்கை கடைபிடிக்குதா? அதனாலதான் தரேன்னு சொல்றீங்களா? என்ற கேள்விக்கு, பிஎம் ஸ்ரீ கல்வி திட்டத்தில் மத்திய அரசு சில நாம்ஸ்களை கொடுக்குது. அதை வேண்டாம் என்கிறார்.  ஆனா இதே இவங்க கூட்டணியில கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன். அவருவே உடன்பட்டு கையெழுத்து போட்டு அதை வாங்கிட்டார். அவருடைய மக்கள் மேல் அவருக்கு அக்கறை இருக்கு.

கேரளா ஏற்கவில்லை விதிகளை மறுவரையறை செய்ய கோரியுள்ளார் என்ற கேள்விக்கு, 10,000 கோடி ரூபாய் வாங்கிட்டு போயிருக்காரு பினராய் விஜயன். நீங்க என்ன வாங்கிட்டு வந்தீங்க.  புரட்சி தலைவர் என்ன சொன்னார்? உரிமைக்கு குரல் கொடுப்போம் சொன்னாரா இல்லையா? அதெல்லாம் செய்யணும் மாநில அரசு மக்கள் நலன் சார்ந்து இருக்கணும். கஞ்சா எவ்வளவு வைக்கிறாங்க? ஜாபர் சாதிக் யாரு? எவ்வளவு போதை பொருள் நடமாட்டம் இருக்கிறது?.எங்க கட்சிய விட்டுருங்க. எங்க கட்சி ஜெயிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.அதை நாங்கள் சொல்கிறோம்.ஒவ்வொரு குக்கிராமத்திலையும் கஞ்சா டீலர் இருக்கிறார் எனக் கூறினார்.

குஜராத்தில் கஞ்சா சிக்கவில்லையா என்ற கேள்விக்கு?,பிடிபட்டாலும் தமிழ்நாட்ட பத்தி முதல்ல பேசுங்க நீங்க குஜராத் போறீங்க நீங்க இங்கதான சாப்பிறீடுங்க இட்லி தோசையை முதலில் சாப்பிடுங்க ரெண்டாவது சப்பாத்தி சாப்பிடுங்க.மெத்தபட்டமைன் பற்றி பொன்.ராதாகிருஷ்ணன் அண்ணன் சொன்னார் குழந்தைகளே பிறக்காது சந்ததி வாழணும் என்றார்.

இதையும் படிங்க: செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத ஜந்துக்கள்! விளாசிய நயினார் நாகேந்திரன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share