×
 

வெற்று விளம்பரங்களை விட நெற்பயிர்கள் முக்கியம்... நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்.!

வெற்று விளம்பரங்களை விட விளைவித்த நெற்பயிர்கள் முக்கியம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விவசாயிகளின் நெற்பயிர்களைப் பாதுகாப்பதில் அரசின் அணுகுமுறை குறித்து கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். வெற்று விளம்பரங்களை விட விளைவித்த நெற்பயிர்களே முக்கியமானவை என்று அவர் வலியுறுத்தினார்.செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள தொழுப்பேடு பகுதியின் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் அடுக்கப்பட்டிருந்த சுமார் 50 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிப்பதாக நாகேந்திரன் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 50 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. ஆனால் விளைவித்த நெற்பயிர்களைப் பாதுகாக்க வெறும் நூற்றுக்கணக்கான நெல் சேமிப்புக் கிடங்குகளே இயங்கி வருவதாகவும், அவற்றில் பெரும்பாலானவை மேற்கூரையற்ற திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளாகவே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சூழலில் நவீன நெல் சேமிப்புக் கிடங்குகளை அதிகப்படுத்துவதற்குப் பதிலாக, ரூ.10 கோடியில் வெறும் 43,500 விவசாயிகளுக்கு மட்டும் தார்பாய்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல என்று நாகேந்திரன் தெரிவித்தார். லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு மத்தியில் வெறும் 43,500 பேருக்கு மட்டும் தார்பாய்கள் வழங்கினால், மீதமுள்ள விவசாயிகளின் உழைப்பு மழையில் நனைந்து வீணாகிவிடும் என்பதை முதல்வர் சிந்திக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீரைத் திறப்பதை விளம்பரப்படுத்த ரூ.5 கோடி வரை செலவிடுவதை விட, தமிழகத்தில் உள்ள திறந்தவெளி அரசு கொள்முதல் நிலையங்களுக்கு மேற்கூரை அமைப்பதே முக்கியம் என்று நாகேந்திரன் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: புலிப்பட வருவாயை மறைத்த உத்தமர், மிசா குறித்து பேசுவதா? தயாநிதி மாறன் கடும் விமர்சனம்!!

அடுத்த ஜென்மத்தில் தான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று கூறும் முதல்வர், தற்போதைய காலகட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.விளைபொருட்களைப் பாதுகாக்க நவீன கிடங்கு வசதிகளை விரிவுபடுத்துவது அவசியம் என்பதையும், வெறும் தற்காலிக ஏற்பாடுகளால் விவசாயிகளின் உழைப்பு பாதுகாக்கப்படாது என்பதையும் நாகேந்திரன் தனது கருத்தில் எடுத்துரைத்தார்.

 

 

இதையும் படிங்க: லண்டன் செல்லும் CM..!! ரேஸ் களத்தில் அஜித்.. நேரில் காண வருகிறாரா விஜய்? எகிறும் எதிர்பார்ப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share