×
 

அவரும் எங்க கூட்டணி தான்; இவரும் எங்க... நயினார் நாகேந்திரன் கருத்தால் ஏற்பட்ட குழப்பம்!!

எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் தேசிய ஜனநாயக கூட்டணியோடு தான் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்தது. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் அமமுகவின் டிடிவி தினகரன், தாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எங்களை அழைக்காதது வருத்தமே என்று தெரிவித்தார். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியோடு தான் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி இதயத்தில் அண்ணனுக்கு தனி இடம் இருக்கு.. யாரை சொல்கிறார் அண்ணாமலை?

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் மக்களுக்கு எதிரான ஆட்சி நடந்து வருகிறது. அதனை அகற்ற வேண்டும் என்றால், அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும். மக்கள் நலனுக்காக அனைத்து கட்சிகளின் தலைவர்களும் முடிவு எடுக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே பாஜக உடன் கூட்டணியில் இருக்கிறார். அதன் காரணமாகவே அமித் ஷா வருகையின் போது ஓபிஎஸ்-ஐ அழைக்கவில்லை. அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்ததற்கான காரணமே வேறு.

ஓபிஎஸ் எங்களுடன் கூட்டணியில் இருப்பதால், அவரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருமே எங்காளுடன் கூட்டணியில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதற்கு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கமே காரணம். அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துகொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாஜக ஸ்ட்ராங்கா இருக்கு; INDIA கூட்டணி பலவீனமா இருக்கு.. ப.சிதம்பரம் பகீர் கருத்து!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share