பாஜகவில் இணைகிறாரா செங்கோட்டையன்? - டெல்லி சீக்ரெட்டை உடைத்த நயினார் நாகேந்திரன்...!
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் அவரை பாஜகவிற்கு இணைக்க வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் அளித்துள்ள பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் அவரை பாஜகவிற்கு இணைக்க வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் அளித்துள்ள பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்து இருந்தார். இதற்கு அடுத்த நாளே, அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் உட்பட செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். மேலும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக நிர்வாகிகளின் கட்சி பதவிகளும் பறிக்கப்பட்டன.
செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் சுமார் ஆயிரம் பேர் கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதனிடையே செங்கோட்டையனுக்கு அதிமுகவில் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அமித் ஷாவை சந்திப்பதற்காக இன்று காலை கோவை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: அண்ணாமலையால் பலி கிடா ஆன நயினார் நாகேந்திரன்... டிடிவி தினகரன் விலகலுக்கு காரணம் இதுவா?
செங்கோட்டையன் பாஜகவில் இணைய உள்ளதாகவும், பாஜக ஆதரவுடன் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க திட்டமிடுவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் செங்கோட்டையன் குறித்த அனைத்து வதந்திகளுக்கும் பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரனிடம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் அவரை பாஜகவிற்கு இணைக்க வாய்ப்பிருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “எதை வைத்து கேட்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். ஒரு கட்சியில் இருப்பவரை அப்படியெல்லாம் அழைக்க முடியாது. செங்கோட்டையனை கூட்டணிக்கு அழைக்க முடியாது” எனக்கூறினார்.
டிடிவி தினகரன் என்னை பற்றி இப்படி எல்லாம் பேசி இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.டிடிவி தினகரன் இபிஎஸ் ஓபிஎஸ் அனைவருமே எனக்கு நண்பர்கள் தான் என்றார்.
செங்கோட்டையன் டெல்லி செல்கிறார். பாஜக தலைவர்களை சந்திக்க செல்கிறாரா? என்ற கேள்விக்கு, அவருடைய மனநிலை எனக்கு தெரியாது. அவர் கோவிலுக்கு செல்கிறார் என்று சொல்லி இருக்கிறார்.
செங்கோட்டையனை நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுவரை பேசவில்லை. அவரும் தொடர்பு கொள்ளவில்லை எனக்கூறினார்.
இதையும் படிங்க: TTV வெளியேற நான் காரணமில்ல! ஆனா... மனம் திறந்த நயினார்