17 திமுக அமைச்சர்கள் அடுத்தடுத்து கைது... மொத்தமாக முடிக்கப்போகும் ED... நயினார் நாகேந்திரன் சவால்...!
திமுக அரசுடைய ஒத்துழைப்போடு மெத்தபெட்டமைன் முதல் கஞ்சா முதல் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது.
வேலூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் பொதுக்கூட்டம் மண்டி வீதியில் நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநில தலைவர் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
வேலூர் இன்று ஊழல் மிகுந்த மாநகராட்சியாக மாறியுள்ளது. இங்கு மட்டுமே 5 மேயர்கள் இருக்கிறார்கள். வேலூர் மாநகராட்சி மேயர் சிக்கலில் மட்டுமல்ல ஊழல்களிலும் மாட்டியுள்ளார். வேலூருக்கு தோல் தொழில் பூங்கா கொண்டு வருவோம் என கூறினார்கள் இதுவரை கொண்டு வரவில்லை. பெண்களை படுகேவலமாக இழிவாக பேசுகிற கட்சி இருக்கிறது என்று சொன்னால் அது திமுக தான். அந்த கட்சி தான் தற்போது தமிழகத்தை ஆண்டுக் கொண்டிருக்கிறது. மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் தந்து விட்டு டாஸ்மார்க் கடைகளை திறந்து வைத்திருக்கின்றனர்.
தெய்வீகம் நிறைந்த வேலூர் மண்ணில் மதுவும், போதைப்பொருட்களும் தாராளமாக புரளுகிறது. காவல்துறையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தாமல் என்ன செய்து கொண்டிருக்கிறார் என தெரியவில்லை?. திமுக அரசுடைய ஒத்துழைப்போடு மெத்தபெட்டமைன் முதல் கஞ்சா முதல் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளைச் சுற்றி போதைப்பொருள் விற்கிறார்கள். இதை எல்லாம் கண்டுகொள்ளாத துறையாக கட்டுப்பாடு இல்லாத துறையாக காவல்துறை செயல்படுகிறது.
இதையும் படிங்க: பள்ளிக் கல்வித் துறை சீர்கேட்டால் தான் மாணவன் மரணம்... பாஜக செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டு...!
வேலூர் சிஎம்சி மருத்துவமனையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஆட்டோ ஓட்டுநர்களால் கத்தியைக் காட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை மறுக்க முடியுமா?. காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரை ரயிலிலிருந்து தள்ளிவிட்ட கொடுமை நேர்ந்தது.
கஞ்சா போன்ற போதைப்பொருட்களின் புழக்கத்தால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. காவல்துறை இதைக் கட்டுப்படுத்தாமல் என்ன செய்து கொண்டிருக்கிறது? . கிராமத்து போதை பொருட்களைத் தவிர வெளிநாட்டு போதை பொருட்களும் வேலூரில் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது
இதனால் இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் இரண்டு மாத காலம் தான் உள்ளது இரண்டு மாதத்தில் தீவிரமாக சிந்திக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஐம்பது சதவீதம் அதிகரித்துள்ளது. புத்தகத்தை சுமக்க வேண்டிய குழந்தைகள் வயிற்றில் குழந்தைகளை சுமந்து கொண்டிருப்பதற்கு காரணம் இந்த திராவிட ஆட்சி தான். திமுக அமைச்சர்கள் ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். 17 அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை பாய்ந்துள்ளது. இவர்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என எச்சரித்தார்.
இதையும் படிங்க: குனிஞ்சு கும்பிடு போட எதுக்கு அதிமுக பெயர்? நான் கேட்கலப்பா... அவங்கதான்..! முதல்வர் ஸ்டாலின் விளாசல்..!