சி.ஜோசப் விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கு?... விடிந்ததுமே கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்..!
தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் குற்றச்சம்பவங்களை அதிமுக, திமுக, அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கோவையில் 10 வயது சிறுமி, மரக்காணத்தில் 11 வயது சிறுமி என குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தரப்படும், போதைப்பொருள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என வாக்குறுதி கொடுத்த முதலமைச்சர் விஜய், தற்போது ஆக்ஷனில் இறங்காமல் மெளனம் காப்பதாக மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் குற்றச்சம்பவங்களை அதிமுக, திமுக, அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சோசியல் மீடியா பக்கத்தில், ஆட்சி மட்டும் தான் மாறியுள்ளதே தவிர, அவலங்கள் அப்படியே தான் தொடர்கின்றன! கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய கோவை சிறுமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலையின் ரணம் ஆறும் முன்னே, மீண்டும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது.
பாதிக்கப்பட்ட சிறுமி முழு மன மற்றும் உடல் நலத்துடன் விரைவில் குணமடைந்து இக்கொடூரத்தை கடந்து வர நாம் அனைவரும் துணை நிற்போம். தனக்கு ஓட்டுப் போடுமாறு பெற்றோர்களை நச்சரியுங்கள் என எந்தக் குழந்தைகளை திரு. ஜோசப் விஜய் அவர்கள் தூண்டி விட்டாரோ, நான் தான் உங்கள் தாய்மாமன் என சென்டிமென்ட் வசனம் பேசி எந்தக் குழந்தைகளுக்கு திரு. ஜோசப் விஜய் அவர்கள் தூண்டில் போட்டாரோ, அந்தக் குழந்தைகள் தான் தினசரி ஒரு பாலியல் மிருகத்திடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதை அவர் வேடிக்கை பார்ப்பது மலினவான குணாதிசயம்.
இதையும் படிங்க: விவசாய கடன் தள்ளுபடி எப்போது?... திடீரென வந்து விழுந்த அடுத்த கேள்வி திடுக்கிட்டு ஓடிய தவெக வேளாண்துறை அமைச்சர்...!
இவ்வாறு தனது ஆட்சியில் நடக்கும் எந்தப் பிரச்சினைகளையும் கண்டு கொள்ளாமல், "மற்றொரு பொம்மை" போல முதல்வர் அரியணையில் அமர்ந்திருக்கும் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது?
இதையும் படிங்க: மருத்துவத்தில் தனியார் மயமா? வெட்கக்கேடு... தமிழக அரசை வறுத்தெடுத்த சீமான்..!