×
 

மகளிர் உரிமைத்தொகையா? தேர்தல் அச்சாரத் தொகையா? திமுகவின் மானத்தை வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

மகளிர் உரிமைத் தொகை விவகாரத்தை தேர்தலுக்கான அச்சாரத்தொகையாக திமுக அரசு பயன்படுத்துவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டியுள்ளார். 

மகளிர் உரிமைத் தொகை விவகாரத்தை தேர்தலுக்கான அச்சாரத்தொகையாக திமுக அரசு பயன்படுத்துவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டியுள்ளார். 

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில விடுப்பட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் படிப்படியாக ஆய்வு செய்யப்படு வருகின்றன. மேலும் உங்களுடன் ஸ்டாலின் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு 45 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று கூறினார். ஒரிரு மாதங்களில் புதிததாக விண்ணப்பத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இதனிடையே, மகளிர் உதவித்தொகை வழங்குவதை திமுக திட்டமிட்டே காலதாமதம் செய்வதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டியுள்ளார். 

இதையும் படிங்க: “சிறுமிகள், பெண்களை சிதைக்கும் திமுககாரன்” - Out of control-ல் இயங்கும் அறிவாலய உடன்பிறப்புகளை சாடிய நயினார்...!

இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே? 2021 தேர்தலுக்கு முன் அனைத்து மகளிருக்கும் மாதம் ₹1000 உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்று கூறிவிட்டு 2023 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போட்டது ஏன்? 30 மாதங்கள் வழங்காமல், 2024 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சரியாக இரண்டு மாதங்களுக்கு முன் சிலருக்கு மட்டும் உரிமைத் தொகையை வழங்கியது ஏன்?

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், சில மாதங்களில் மீதமுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி மீண்டும் மீண்டும் தமிழக மகளிரை ஏமாற்ற முயற்சிப்பது ஏன்? தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைத் தொகையைப் பெற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் கால்கடுக்க நின்று மனு அளித்தபோதெல்லாம் கண்டுகொள்ளாத அரசுக்குத் தேர்தல் நெருங்கும்போது மட்டும் மகளிரின் உரிமை ஞாபகம் வருகிறதா?

ஆட்சி அரியணை ஏறும் முன் அனைவருக்கும் வழங்கப்படும் என்று கூறிவிட்டு, ஆட்சி அமைத்ததும் "தகுதியற்றவர்கள்" என்று சிலரை முத்திரை குத்துவது தான் திராவிட மாடல் சமத்துவமா? இத்திட்டத்தின் பயனாளிகளை அநாகரீகமாக விமர்சித்து திமுகவினர் புளகாங்கிதம் அடையும் வேளையில், இது உண்மையிலேயே மகளிர் உரிமைத் தொகையா? அல்லது மகளிரை இழிவுபடுத்தும் தொகையா?

சரி, தங்கள் கணக்குப்படி "தகுதியுள்ளவர்கள்" என்று வகைப்படுத்தப்பட்ட மகளிருக்கு 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் வழங்காமல் விட்ட உரிமைத் தொகையான ₹30,000 கடனை எப்போது தான் அடைப்பீர்கள்? போதும் போதும் முதல்வரே! ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என்று கடந்த நான்காண்டுகளில் பல்லாயிரம் முறை ஏமாற்றிய உங்களை இனி ஒருபோதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! எனக்குறிப்பிட்டுள்ளார். 

 

இதையும் படிங்க: பாஜக கூட்டத்தில் இவர்கள் பங்கேற்க கூடாது... மீறினால் அனுமதி ரத்து... நயினார் தலையில் இறங்கியது பேரிடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share