“ஆஹா ஒன்னு கூடிட்டாங்கய்யா” - அண்ணாமலைக்கு சப்போர்ட் செய்த நயினார் நாகேந்திரன்... திமுக உ.பி.க்கள் கதறல்...!
திமுகவினர் அண்ணாமலையின் கருத்துக்களை திரித்துக்கூறி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று காலை 7 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பரமக்குடியில் இன்றைய தினம் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு குரு பூஜையில் கலந்து கொள்ள வந்துள்ளேன். பாரதிய ஜனதா கட்சி என்றைக்குமே மற்றவர்கள் போற்றும் வகையில் செயல்படுகிறது என்றார்.
அதிமுகவை சுக்குநூறாக உடைத்த பாஜக குற்றச்சாட்டு? குறித்த கேள்விக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எங்களுடன் தான் உள்ளார். எந்தவித கருத்து வேறுபாடு இல்லை எனக்கூறினார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனை டெல்லியில் உள்துறை அமைச்சர் சந்திப்பு குறித்த கேள்விக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்தது சாதாரணமானது. அது பற்றி எனக்கு முழுமையாக தெரியாது தெரிந்ததும் தங்களிடம் சொல்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: அடடா! இதுதான் உலகம் போற்றும் மருத்துவ கட்டமைப்பா? வறுத்தெடுத்த நயினார் நாகேந்திரன்
டிடிவி தினகரன் ஓபிஎஸ் போன்றவர்கள் அதிமுகவில் இணைவது குறித்த கேள்விக்கு.?
இருவரும் ஒரு சில கோரிக்கைகள் வைத்துள்ளனர் அது குறித்து அவர்கள் தான் பேசி முடிவெடுக்க வேண்டும் எனக்கூறியவர், விஜயின் சனிக்கிழமை பிரச்சாரம் குறித்த கேள்விக்கு?, சனிக்கிழமை என்பது என்னவென்று உங்களுக்கு தெரியும் ஆகையால் நான் கூற ஒன்றும் இல்ல என்றார்.
திமுக கூட்டணி வலுவாக உள்ளது அண்ணாமலைக் கூறியது குறித்து கேள்விக்கு?, அண்ணாமலை திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்று கூறவில்லை. திமுகவினர் அண்ணாமலையின் கருத்துக்களை திரித்துக்கூறி வருவதாக தெரிவித்தார். நயினார் நாகேந்திரனுக்கு எதிராக அண்ணாமலை செயல்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், அவர் அண்ணாமலைக்கு சப்போர்ட்டாக உண்மையை போட்டுடைத்திருப்பது திமுக உடன்பிறப்புகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி முதல்வர் பதவிக்கு போட்டியிட எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தெரிவித்துள்ள கருத்துக்கு, அது டிடிவி சாரின் கருத்து.அது பற்றி நான் கருத்து கூற முடியாது எனக்கூறினார்.
இதையும் படிங்க: தாமிரபரணியை தலைமுழுகிடுச்சா திமுக? நயினார் சரமாரி கேள்வி