×
 

நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை... G.H.-ல் குவியும் கம்யூனிஸ்டுகள்..!

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நல்லக்கண்ணு தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் கம்யூனிஸ்டுகள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்துள்ளனர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 101 வயதை எட்டியிருக்கும் இந்த மாமனிதரின் உடல்நிலை வயது மூப்பால் ஏற்பட்ட பல்வேறு இணை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக பிரச்சினை, சுவாச தொல்லை, நுரையீரல் தொற்று உள்ளிட்டவை அவரை தீவிரமாக பாதித்துள்ள நிலையில், மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து, செயற்கை சுவாச உதவி மற்றும் தேவையான மருந்துகளை அதிகரித்து அதிதீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.கடந்த டிசம்பர் இறுதியில் இருந்தே அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வந்தாலும், பிப்ரவரி மாத தொடக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த சில நாட்களாக, குறிப்பாக பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் உடல்நிலையில் கணிசமான பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் மருத்துவக் குழு மேலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களும், தலைவர்களும் மருத்துவமனை வளாகத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க: தொடர் சிகிச்சை... நல்லகண்ணுவின் உடல்நிலை எப்படி இருக்கு? நலம் விசாரித்த ரஜினிகாந்த்..!!

கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், முத்தரசன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அடிக்கடி வந்து மருத்துவர்களிடம் பேசி, உறவினர்களுடன் ஆறுதல் பகிர்ந்து வருகின்றனர். கட்சித் தொண்டர்கள் குவிந்து வருவதால் மருத்துவமனை வாசலில் சிறிது கூட்டம் அதிகரித்துள்ளது. ஆனால், தீவிர சிகிச்சைப் பிரிவு என்பதால், உள்ளே நேரடி சந்திப்புக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. பலரும் வெளியே காத்திருந்து, நல்லகண்ணு அவர்களின் நலம் விரைவில் தேற வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நல்லக்கண்ணுவுக்கு தொடர் சிகிச்சை... இயற்கையோடு போராட்டம்... சிபிஐ வீரபாண்டியன் தகவல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share