தோளோடு தோள் நின்ற மகத்தான போராளி... நல்லக்கண்ணு மறைவுக்கு MP கனிமொழி இரங்கல்..!!
தகைசால் தமிழர் நல்லகண்ணு மறைவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இரங்கல் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய இழப்பாக அமைந்துள்ளது. 101 வயதில், நீண்டகால உடல்நலக் குறைவுக்குப் பிறகு அவர் காலமான செய்தி பலரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக, சுதந்திரப் போராட்டத்தில் இருந்து தொடங்கி தொழிலாளர் உரிமைகள், சமூக நீதி, விவசாயிகளின் நலன் என பல தளங்களில் அயராது பாடுபட்டவர் அவர்.
அவரது வாழ்க்கை ஒரு உண்மையான போராளியின் பயணமாகவே இருந்தது. தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி நல்லகண்ணு மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், நல்லகண்ணு பங்களிப்புகளை மிகுந்த மரியாதையுடன் நினைவுகூர்ந்தார். குறிப்பாக, சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் அவர் நடத்திய போராட்டங்கள் தமிழகத்தில் என்றும் நிலைத்து நிற்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
திமுகவும், திராவிட இயக்கமும் எப்போதும் இடதுசாரி சிந்தனைகளுடன் இணைந்து பயணித்துள்ள நிலையில், இத்தகைய மூத்த தலைவரின் மறைவு அனைவருக்கும் பெரும் இழப்பு என்பதை அவர் உணர்த்தியிருந்தார்.
இதையும் படிங்க: மறைந்தார் தோழர் நல்லக்கண்ணு!! நேர்மையான தலைவர்!! நம் நூற்றாண்டு போராளியின் வாழ்க்கை வரலாறு!
அவரது பதிவில், விடுதலைப் போராட்டம் தொடங்கி, தீண்டாமை ஒழிப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு என சமூகச் சீர்திருத்த போராட்டங்களில் தன் வாழ்நாளெல்லாம் உழைக்கும் மக்களுடன் தோளோடு தோள் நின்ற முதுபெரும் பொதுவுடைமைப் போராளி., தகைசால் தமிழர் ஐயா நல்லக்கண்ணுக்கு செவ்வணக்கம் என்று தெரிவித்தார். தியாகங்களும் போராட்டங்களும் நிறைந்த பெருவாழ்வுக்கு சொந்தக்காரரான அவரது புகழ் இத்தமிழ் நிலத்தில் என்றும் நிலைத்திருக்கும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: பேரதிர்ச்சி… தகைசால் தமிழர் நல்லகண்ணு காலமானார்..!!