×
 

தவெக பாணியால் சர்ச்சையில் சிக்கிய நயினார் நாகேந்திரன்... அங்கன்வாடி மையத்திற்குள் அத்துமீறினாரா?

நெல்லை பெருமாள்புரம் அங்கன்வாடி மையத்திற்குள் ஆய்வு செய்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனால் சர்ச்சை

நெல்லை பெருமாள்புரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் நிகழ்ச்சியை கொண்டாடுவதற்காக இன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வந்திருந்தார். அப்பொழுது அந்த அங்கன்வாடி மையத்தில் வகுப்பறையில் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

அப்பொழுது ஆசிரியரிடம் நயினார் நாகேந்திரன் உள்ளே வரலாமா என கேட்டார். அப்பொழுது அவரும் வாருங்கள் எனக் கூறினார். பின்னர் நயினார் நாகேந்திரனோடு சேர்ந்து பாஜகவினர் சிலரும் உள்ளே சென்றனர். 

அப்பொழுது அங்கிருந்த பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினார். பின்னர் சிறிது நேரத்தில் நோட்டு புத்தகம் மற்றும் டிபன் பாக்ஸ்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. வகுப்பறை நேரத்தில் அரசியல் கட்சியினர் பள்ளிகளுக்குள் செல்ல வேண்டாம் என அமைச்சர் ராஜ்மோகன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அறிவுறுத்தியிருந்த நிலையில்,  இன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் அங்கன்வாடி மையத்தில் நோட்டுப் புத்தகம் வழங்குவதற்காக உள்ளே சென்று மாணவர்களிடம் கலந்து உரையாடியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 

இதையும் படிங்க: "ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும்"..! மிரட்டிய நபர்களை தீர விசாரிக்கனும்..! நயினார் வலியுறுத்தல்..!

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது, பிரதமர் மோடியின் பிறந்த நாளை சேவை நிகழ்ச்சியாக செய்து வருகிறோம். அங்கன்வாடிகளுக்கு தேவையான உதவிகளை செய்வது, பாராட்டுவது இலவசமாக சீருடை வழங்குவது உணவுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறோம்.

தொண்டு நிறுவனங்கள் படிக்க வைக்கிறோம் என்ற பெயரில் வேறு வேலையை செய்கிறார்கள்.மக்களுக்கு தேவையில்லாத தவறான செயல்களை செய்து வருகிறார்கள் அமைச்சர்கள். தமிழகத்திற்கு இடைத்தேர்தல் தேவையா.அதே வேட்பாளர்கள் தான் நிற்கிறார்கள் அதற்கு என்ன அவசியம் வந்திருக்கிறது.

தமிழக முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டு இருக்கிறது.இடைத்தேர்தல் முடிவுகள் மக்கள் எண்ணத்தில் இருப்பது வெளியில் வரவேண்டும். இல்லையென்றால் தமிழக மக்கள் நடிகை நடிகர்களின் பின்னால் போய்விட்டார்கள் என பெயர் வந்துவிடும். இன்றைக்கு மின்சார தட்டுப்பாடு பால் தட்டுப்பாடு என பல பிரச்சினைகள் இருக்கிறது.

அம்பாசமுத்திரம் தேர்தலில் பாஜக சார்பில் மாநில தலைவராகிய நீங்கள் போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா?  என்ற கேள்விக்கு, முதலில் இடைத்தேர்தல் வரவேண்டும். இந்த இடைத்தேர்தல் முடிவுகள் வரட்டும். 26, 27 ம் தேதிகள் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறேன். பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம் திட்டத்தை கண்டிப்பாக தமிழக அரசு மாற்றி விடும் அதில் மாற்றுக்கருத்தே இல்லை.

டெண்டர் விடாமல் வேண்டியவர்களுக்கு அந்தத் திட்டத்தை கொடுத்தால் அது ஊழலா இல்லையா? என்ற கேள்விக்கு கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் மின்வெட்டு காரணமாக போராடி வருகிறார்கள் .அவர்களும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.
 

இதையும் படிங்க: "விநாயகர் சிலையை அவமதித்த தவெகவினர்"..! அரெஸ்ட் பண்ணுங்க... நயினார் காட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share